Dec25 இயேசு கிரிஸ்து பிறந்த தினத்தன்று அனைவரும் சந்தோசமாகவும் , உற்சாகமாகவும்
கொண்டாடவேண்டிய நாள். ஆனால் இந்த முறை அதற்கு மாறாக அந்த சந்தோசமும்
உற்சாகமும் பிறந்தது நம் குழந்தைகளிடையே முதன்முறையாக! காரணம் அன்று நடந்த
மிகப்பெரிய ஆச்சரியம்.
அதென்ன ஆச்சரியம்!
கிரிஸ்துமஸ் அன்று 'கிரிஸ்துமஸ் தாத்தா' வந்து பரிசுகளைக் கொடுப்பது சந்தோசம் தான். அதே அவர் இரண்டு முறை வந்தால் மகிழ்ச்சியின் அளவுகோல் யாருக்குத்தான் தெரியும்!
இரண்டு முறையா! அதெப்படி!
அதுவும் லண்டனில் இருந்து வந்தவர் என்றால் சும்மாவா!
Smile-ன் மூன்றாம் ஆண்டு விழாவில், Smile-ஐ அலங்கரித்ததற்காக 'Smile Excellence Award' கொடுத்து நாம் அலங்கரித்தோம் திரு.கார்த்திகேயனை. இவர் தாம்பரம் GLC Home-ல் உள்ள எண்ணற்ற குழந்தைகளின் கனவுகளை தூசு தட்டி புதுப்பித்து வரும் ஒரு Smile-ன் விதை. உங்களுக்கு நினைவிருக்கலாம், இப்படி பல விதைகளை GLC-ல் தூவியது Smile-ன் ஆஸ்தான புன்னகை Renugadevi. Karthikeyan தனது அலுவலகத்தில் அந்த Smile Award-ஐ வைக்க, அதை பார்த்த அவரது லண்டன் நண்பர் அதைப்பற்றி விசாரிக்க , அந்த சிறிய உரையாடலின் விளைவு தான் நமது 'லண்டன் கிரிஸ்துமஸ் தாத்தா'.
அடுத்த முறை அந்த நண்பர் லண்டனில் இருந்து திரும்பி வரும் போது அவர் கொண்டு வந்தது நம் குழந்தைகளின் புன்னகை வெள்ளத்திற்கு காரணமான அந்த பரிசுகளை தான். அத்தனை பொம்மைகளையும் கிரிஸ்துமஸ் அன்று கொண்டு வந்தார் கார்த்திகேயன் நம் Kosapet-Home க்கு. ஒரு அறை முழுதும் அடுக்கி வைத்து ஆச்சரியத்துடன் பார்த்தோம் நாம். காரணம் , இதுவரை நாமே பார்த்திராத அதிசய பேசும் பொம்மைகளும் , ஓடும் ரயிலும், ஆடும் குரங்கு என அத்தனையும் ஒரே இடத்தில். நாம் இந்த ஏற்பாட்டைசெய்து கொண்டிருக்கும் பொது அந்த அறையைஎட்டிப்பார்த்த சிறுவன் 'இதெல்லாம் எங்களுக்கா !' நிசமா எங்களுக்கா!' என்று
கேட்டது அவன் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் காட்டியது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளை வரிசையாக அறைக்கு வெளியே
நிறுத்தினோம். முதலில் உள்ளே நுழைந்தாள் ஒரு சிறுமி. அந்த பொம்மைக் குவியலை
ஆச்சரியத்துடன் பார்த்தாள் கண்விரிக்க, ஒரு கண்காட்சி போல். அவள் ஆச்சரியத்தை உடைக்க அருகே சென்ற Smile-ன் குரல் ஒன்று ''உனக்கு எது வேணுமோ அதை நீயே எடுத்துக்க" என்றது. ஐயோ! அந்த குழந்தையின் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம். அவள் கண் முழுக்க பொம்மைகள்....... கால்கள் ஒவ்வொரு பொம்மையின் திசையை நோக்கி நகர்கிறது. கைகள் அத்தனையும் எனக்கா என்று கிள்ளிப் பார்க்கிறது மகிழ்ச்சியில்...... முடிவெடுக்க முடியாதவளாய் திகைக்கிறாள் ஒரு நிமிடம். அறைக்குள் நுழையும் போது காய்ச்சலோடு வந்தவள் இப்பொழுது ஏனோ இறக்கை கட்டிப் பறக்கிறாள்......சிரிக்கிறாள்.... அத்தனை மகிழ்ச்சியை நாம் கண்டதில்லை அவள் முகத்தில்......
அந்த பிரகாசத்தை அவளை பெற்றவள் கூட பார்த்திருக்க மாட்டாள். நமக்கும் ஒரு சந்தேகம் , '' ஒருவேளை அந்த பொம்மை குவியலுக்கு நடுவில் இயேசு தெரிகிறாரோ..." அவளுக்கு எப்படியோ! நமக்கு அந்த நிமிடம் கண் முன் தெரிந்தது முகம் தெரியாத நமது லண்டன் கிரிஸ்துமஸ் தாத்தா மட்டுமே...... அவருக்கு நன்றி மட்டும் சொன்னால் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுவோம்.........
இறுதியாக தனது கைக்குள் அடங்காத ஒரு பெரிய பேசும் பொம்மையை ஊமைபோல் எடுத்துச் சென்றாள்..... அடுத்தடுத்து வந்து ஆச்சரிய பார்வையுடனும், திரும்பி கேட்டு விடுவார்களோ என்ற பயத்துடன் வேகமாய் வெளியேறுவதும் , வெளியே போய் "எனக்கும் கிடைச்சுடுச்சு" என்று கர்வமாய் நண்பர்களை பார்த்து சிரித்ததும் ஒரு புதிய அனுபவம் அந்த Hostel-கே. கடைசியாக மிச்சம் இருந்த ரயில் பொம்மைக்கு போட்டி போட்டது நமது +1 படிக்கும் குழந்தைகள்.
இறுதியாக அனைவரையும் பொம்மைகளோடு பொம்மை போல் நிற்க வைத்து ஒரு 'Photo'.... அப்போது அவர்கள் கண்ணில் தெரிந்தது இது மட்டுமே ' நாங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் அல்ல ..... வாழப்பிறந்தவர்கள்.......... ' அவர்கள் பாடிய கிரிஸ்துமஸ் பாடலும் இதுவே.....
"நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்......... லண்டன் கிரிஸ்துமஸ் தாத்தா'
இந்த ஆச்சரியம் முடிந்த சிறிது நேரத்தில் கதவைத் தட்டியது நமது Smile- கிரிஸ்துமஸ் தாத்தா வழக்கம்போல் இனிப்புகளுடன். .. இம்முறை Hostel - மட்டுமின்றி அந்த தெருவில் உள்ள குழந்தைகளும் ஆடிப்பாடினர் நமது தாத்தாவுடன்....
அப்படி போடு... அப்படி போடு..... என்ற பக்திப் பாடலுக்கு ! அட்டகாசமாய் ஆட்டம் போட்ட தாத்தா நமது Gopi.... ஒரு வழியாய் இங்கு விழாவை முடித்துக்கொண்டு கிளம்பினோம் Waltax Home-க்கு.
நிரம்பி இருந்த அந்த TV Hall-ஏ காலியானது ஒரே நிமிடத்தில். நமது Smile - கிரிஸ்துமஸ் தாத்தா வாக உள்ளே நுழைந்தவர் Prabhu................... இங்கும் அதே ஆட்டம், பாட்டம், இனிப்பு என கிரிஸ்துமஸ் மீண்டும் மலர்ந்தது புன்னகையாய் அந்த குழந்தைகளிடத்தில்.....
உண்மையில் அன்று பிறந்தது இயேசு மட்டும் அல்ல..... நாமும்தான் புதிதாய்..... அத்தனை பேரி ட மும் ஒரே கேள்வி தான் ' யார் வகுத்த இலக்கணம் கிரிஸ்துமஸ் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் என்று........ '
மறு நாள் காலை Kosapet சென்ற போது அத்தனை குழந்தைகளும் ஒரு கையில் பொம்மையோடு, மறு கையில் இன்னொரு வேலையை உற்சாகமாக செய்து கொண்டிருந்தார்கள்.
இது தான் 'ஆனந்த தாண்டவமோ!'
No comments:
Post a Comment