Sunday, December 21, 2008
SMILE REACHES 4
கடற்கரையில் பிறந்ததாலோ
என்னவோ ,
உன்னை பெற்றவர்களில் பலர்
இன்று
கடல் தாண்டி இருக்கிறார்கள் ........
இருந்தாலும்
அந்த கனவுகளும்,
கண்களும்
இன்றும்
கணிப்பொறியில்
பேசிக்கொண்டுதான்
இருக்கின்றன ......
ஒவ்வொரு ஆண்டும்
புன்னகையாய் நீ பிறக்கபோது
ஆயிரம்
அழுகையை கொன்றுவிட்டுதான்
பிறக்கிறாய் .....
எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி
நீ !
நான்கே ஆண்டுகள் ஆனாலும்
உனக்கு
400 பிள்ளைகள் ..............
எண்ணிக்கை இருந்தாலும் , எண்ணம் இருந்தாலும்
உன்னை தாங்கி செல்லும்
கைகள் குறைவு
என்ற வருத்தம் உண்டு
எங்களுக்கு ....
பெரிய அறிஞர்களுக்கும்
உனக்கும்
ஒரு வித்தியாசம் ....
அறிஞர்களை ஆண்டு முழுக்க
மறந்துவிடுவோம்
அவர்கள் பிறந்தநாள் தவிர .....
உன்னை ஆண்டு முழுக்க சுமந்தாலும்
உன் பிறந்தநாளை
மறந்துவிட்டோம்....
உன்னை பெற்றவர்களுமா?
நான்காம் ஆண்டின் முதல் அடி ....
விருட்சமாகட்டும் உன்
பதிலடி ....
புறப்பட்டாயோ ! கத்தியின்றி ரத்தமின்றி
கஷ்டங்களை கொல்ல ....
காரியங்களை வெல்ல ...
பிறந்தநாள் வாழ்த்துகளை பரிமாறும்
Adiyen
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment