SMILE WELFARE FOUNDATION

In SMILE
we strongly believe that
- Service is not something superficial
- We do NOT adopt we get adopted
- We do NOT sacrifice we just share
- We do NOT donate we are in turn blessed
For more info on SMILE please visit SMILE

Wednesday, December 24, 2008

சாதனா'08 Mentor Write Up by Adiyen VAsu

கடந்த கால சாதனைகளை படிக்கட்டுகளாக்கி, எதிர்கால கனவுகளை நெஞ்சிலே சுமந்து சத்தமில்லாமல் தன்னுடைய அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது SMILE -ன் சாதனா, சாதனா'08 என்ற உருவில்…

சாதனா'07 ல் நாம் தேடி எடுத்த பாறைகள் அனைத்தும் இன்று சிற்பங்களாய் மாறிக்கொண்டிருப்பதை நாம் SMILE-ன் நான்காம் ஆண்டு விழாவில் பார்த்தோம். ஒவ்வொருவரும் எத்தனை திறமைகளுடன் ஜொலித்தார்கள் என்பதை நேரிலேயே அறிந்தோம். சாதனா வெற்றியாக மாறவும், அடுத்த அடியை எடுத்து வைக்கவும் ஊன்றுகோலாய் சாதனா'07 மாணவர்களை சொல்லலாம். அந்த சிற்பங்களை செதுக்குவதில் SMILE-ல் நியமித்த அவர்களது MENTOR'S-ம் ஒரு முக்கிய காரணம் என்பது பலருக்கு தெரிந்திருக்காது...

Onsite போனாலும் என்னோட Student க்கு fees கட்டனும், அடுத்த வாரம் last date என்று கடல் கடந்து கதவை தட்டிய MENTOR ஒருவர் உண்டு.

"என் Student Computer Cource படிக்கனுமாம். ஏற்கனவே மூன்று Centre -விசாரித்துவிட்டேன். இதுதான் அவளுக்கு Best ன்னு தோணுது" என்று தன் மாணவிக்கு மட்டுமல்ல, அனைத்து MENTOR'S க்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய இன்னொரு MENTOR.
" நீ ஒண்ணும் கவலை படாதே! நான் Presentation பண்றேன்... நான் எப்படி பேசணும்னு சொல்றேன்.. நான் தான் இருக்கேன்'ல.. ஏன் பயம் உனக்கு" என்று அவளுக்கு மட்டும் அல்ல நம் சாதனா'விற்கே துணையாய் நின்ற இன்னொரு MENTOR.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் சாதனா'07 மாணவர்களின் பின்னால் இருந்து செயல்படும் இந்த MENTOR என்ற மந்திர சிற்பிகளைப் பற்றி..
ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத பெரிய சவால் ஒன்று இப்பொழுது நமக்கு இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் கிடைத்தது நாம் தேடி எடுத்த சிறந்த பாறைகள். ஆனால் இந்த ஆண்டு நாம் தேடி எடுப்பதற்கு பதிலாக கிடைத்ததை எடுத்துக் கொண்டோம். அந்த ஒவ்வொரு பாறைக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் சிற்பங்களை அடையாளம் கண்டு கொண்டு செதுக்கப்போகும் சிற்பிகள் யார் என்பதே இப்பொழுதைய கேள்வி.
புன்னகை பாலம் மூலம் பூத்த அந்த பூக்களில் பல வகை... ஒவ்வொன்றும் ஒரு வகை.

"எப்படியாவது Orphan Certificate வாங்கிடும்மா! பின்னாடி அது College சேர உதவும் என்று SMILE ல் ஒருவர் அடிக்கடி வற்புறுத்த - சும்மா சும்மா Orphan Certificate வாங்குன்னு சொல்றியே Orphan ன்னா என்ன? முதல்ல அதுக்கு அர்த்தம் சொல்லு" என்று கேட்ட ஒரு புன்னகை பூ இந்த சாதனா'08 ல் உண்டு.
[இன்று வரை இந்த கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் இல்லை எங்களுக்கு]
காலைல என்னம்மா சாப்பிட்ர .. 7 மணிக்கு போறியே என்று நாம் கேட்க.
Hostel ல Night சாப்பாட்டை எடுத்து வைத்து காலையில் அதையே சாப்பிடரேன்னா! ஏற்கனவே SMILE ல் நிறைய செலவு இதுல இது வேறயா நான் எடுத்த மார்க் க்கு இதுவே அதிகம்" என்று சொன்ன புன்னகை பூவும் இதில் உண்டு.
[ இது SMILEன் மீது அவளுடைய அன்பா! இல்லை அவள் மீது இருக்கும் வெறுப்பா]

"அம்மா எனக்கு தலை வலிக்குது! என்ன பண்றதுன்னே தெரியலை" என்று அவள் Practical Class ல் இருக்கும் மருத்துவ மனையில் இருந்து தன் அம்மாவுக்கு Phone செய்யும் விசித்திர பூவும் உண்டு
[அவள் ஒரு Nursing Assistant Cource Student அம்மாவை நம்பினோர் கை விடப்படார்-ன்றதை தப்பா புரிஞ்சிக்கிட்டாலோ!!!]
நான் இன்னைக்கு எந்த College ல எந்த Hostel ல இருக்கேண்ணு கூட தெரியாது! எல்லாமே செஞ்சது நீங்க தான். அந்தாளு (அவளின் அப்பா ) சுத்த Waste. நான் இருக்கிறது கூட அவருக்கு நியாபகம் இருக்குமோ இல்லையோ " என்று கோவமாக பேசும் பூவும் இதில் உண்டு .
[College - சேர்த்த ஆறு மாதத்தில் ஒரு முறை கூட அவள் தந்தை வரவில்லை என்பது ஆச்சரியமான விஷயம் தான் நமக்கு! அவளுக்கு பழகிவிட்டதாம்]
"என் பொண்ணு எங்க தம்பி படிக்கராண்னு ஒரு தந்தை நம்மை கேட்க" Anna University-ன்னு பெருமையாய் நாம் பதில் சொல்ல, "நல்ல Collegeஅ தம்பி! பெரிய Collegeஆ என்று அவர் கேட்க
SMILE - உனக்கு History ல ஒரு இடம் நிச்சயம் என்று தலை நிமிர்ந்தோம் நாம்.
இவை ஒரு சில உதாரணமே. ஒவ்வொரு புத்தகம் எழுதலாம் ஒவ்வொரு பூவை பற்றி. சந்தோஷம், அழுகை, வெறுப்பு, சிரிப்பு, அடி, அசிங்கம் என்ற பக்கங்களை கடந்து வந்து தன் கல்லூரி படிப்பின் மூலம் பழைய Note ஐ எரித்து விட்டு SMILE ன் சாதனா என்ற புது Note-உடன் இன்று அந்த பூக்கள் புன்னகையை வீசிகொண்டிருக்கிறது.

முதல் பக்கத்தில் நாம் பெயர் மட்டுமே எழுதினோம். அடுத்தடுத்த பக்கங்களில் அவர்களின் வாழ்க்கையை வழி வகுக்கும் எத்தனையோ பாடங்களை நட்பாய் சொல்லிக்கொடுக்கும் அந்த ஆசிரியர்கள் உங்களில் யார்!
"எல்லாம் கஷ்டப்பட்டு படி'ன்னு சொல்லுவாங்க! இவங்க படிக்கறதுக்காகவே ரொம்ப கஷ்டப்பட்டவங்க " … எப்படியோ இவர்களை SMILE கல்லூரி என்ற கரைசேர்த்தது. வெளி உலகத்தில் இவர்கள் மெல்ல அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் வாழ்க்கை பாதையை வழிவகுக்கும் கலங்கரை விளக்கமாய், வழிநடத்தும் Traffic Signal போல இருக்க உங்களின் உதவி மீண்டும் வேண்டும்.
சாதனா'07 செல்வங்கள் என்றாள் சாதனா'08 ல் பல அதிசயங்கள் உண்டு. இந்த வித்தியாசமான பூக்களை ஒன்று சேர்த்து சாதனா'08 ற்கு வெற்றிமாலை அணிவிக்க MENTOR'S வேண்டும்.
உங்களில் SMILE க்கும், இந்த மாணவர்களுக்கும் சரியான பாலமாய் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதே அதிகபட்ச தகுதியாய் கருதப்படுகிறது. எல்லோரும் மாணவிகள் என்பதால் MENTOR'S ம் பெண்களாகவே இருக்க வேண்டும் என்ற விதியையும் நாம் மறப்பதற்கில்லை.

MENTOR'S - என்ற வார்த்தைக்குள் Friend, Teacher, Guide என்ற அனைத்து உறவுகளும் அடங்கி விடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

" Sadhana_08 students க்கு Mentor வேண்டும் Ok ன்ரவங்க சொல்லுங்க என்று தங்கிலீஷிலும்
" We formally invite Volunteers for Sadhana_08 students. Interested please Contact"
என்று ஆங்கிலத்திலும் சொல்ல முடியாத பல விஷயங்களை சுருக்கமாக தமிழில் சொல்ல முயன்றது தவறில்லை என்று நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் உடனே அழையுங்கள்...

வாசு - 98947 90838
ராஜேஷ் - 96000 80399.

1 comment:

Harish said...

Wish I could be there :(