SMILE WELFARE FOUNDATION

In SMILE
we strongly believe that
- Service is not something superficial
- We do NOT adopt we get adopted
- We do NOT sacrifice we just share
- We do NOT donate we are in turn blessed
For more info on SMILE please visit SMILE

Sunday, December 21, 2008

Parents - Punnagai Palam Volunteers meet by Adiyen VAsu

புன்னகை பாலம் - என்ற பெயரில் ஏதோ பிழை இருக்கவேண்டும் என்றே தோன்றியது, இந்த ஆண்டு(2008) பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்த்தால்... மூன்றான்டு கால கடுமையான போராட்டத்திற்கு பிறகு நமக்கு வெற்றி மட்டும் அல்ல, முகத்தில் ஒரு சிறு புன்னகை கூட இல்லாமல் போனதே அப்படி சொன்னதிற்கு காரணம்.

1000-ம் மதிப்பெண்களை கடக்கும் கனவை சுமந்த நமக்கு 900-ம் மதிப்பெண்களே பரிசாய் கிடைத்தது. இதில் எதிர்பார்க்காத சிலர் தோல்வி அடைந்தது மேலும் ஒரு அதிர்ச்சி. பொது தேர்விற்கு முன்பே பல தேர்வுகள் எழுதி, நல்ல பயிற்சி எடுத்து, தயார் நிலையில் இருந்த நம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள பட வேண்டியவை அல்ல, மிகுந்த யோசனைக்குறியது!

எல்லாம் சரியாக இருந்தும் எங்கோ பிழை நடந்து இருக்கவேண்டும் என்ற கணிப்பில் இருந்த PP Volunteers குழு இந்த முடிவுகலுக்கான காரணங்களையும், தவறுகளையும் அராய்ந்தது. இதன் முன்பு நாம் செய்த பல தவறுகளை பட்டியல் இட்டது அந்த PP குழு.

அந்த காரணங்களில் மிகவும் கவனிக்க படவேண்டிய ஒன்று "மாணவர்கள் மனதளவில் மிகுந்த போராட்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தேர்வு சமயங்களில், அதுவே அவர்களை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த முடியாமல் போனதற்கு காரணமாகிவிட்டது " - என்ற காரணம் அனைவரிடமும் எதிரொலித்தது. இதற்கு பல சான்றுகள் உள்ளன

1) அன்று பொது தேர்வு. வழக்கம் போல் நாம் வாழ்த்து தெரிவிக்க Hostel -லில் நுழைந்தாள் கனவுகள் அனைத்தும் கரைந்து கண்களில் கண்ணீராய் நிற்கிறாள் ஒரு மாணவி. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்வு எழுத வேண்டியவள் நிலைகுலைந்து அழுவதற்கான காரணத்தினை கேட்டாள் "அவளது தாயார் தன்னை மேல் படிப்பிற்கு அனுமதிக்க மாட்டேன்" என்று சொல்லி விட்டார்களாம். அவளை சமாதானப்படுத்தி நாம் தேர்விற்கு அனுப்பினாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

2) ஒரு அதிசய மாணவி - பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் அளவிற்கு திறமை இருந்தாலும் அவளுக்கு மேற்படிப்பு இல்லை என்ற முடிவில் அவள் தாயார் இருந்ததால் படிக்க மறுக்கிறது அவள் மனம். இதன் விளைவு தேர்வில் அவள் சுமாரான மதிப்பெண்களையே பெற்றால். தேர்வு முடிவுகள் வந்த அடுத்த நாள் அந்த மாணவியின் தாயார் நம்மிடம் " ஏதாவது நல்ல காலேஜ் கிடைக்குமா" என்று கேட்கும்போது சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை நமக்கு.

இப்படி பல காரணங்கள் பல மாணவிகளிடம் நமக்கு கிடைத்தது. குடும்ப சூழ்நிலை, தேர்வு நேரத்தில் திருமணம் பற்றிய பேச்சு, என்று அடுக்கடுக்காய் பல காரணங்கள் இருந்தாலும் நம்மை பொருத்தவரை அத்தனைக்கும் ஒரே காரணம் தான். "மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏதோ ஒரு இடைவெளி இருப்பது நிச்சயம்" என்று உணர்ந்தோம்.

எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் இப்படி பல காரணங்களால் நாம் வெற்றியை தவற விடுகிறோம். இந்த தவறை இவ்வாண்டு முதலிலேயே திருத்திக்கொள்வது என்று முடிவு செய்தோம்.

இந்த ஆண்டு வழக்கம் போல் மே-மாதம் இவ்வாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான Summer Camp திட்டமிட்டபடி மே மாதம் 1ஆம் தேதி ஆரம்பமானது Waltax home ல். இந்த Summer Camp நடந்துகொண்டு இருக்கும்போது தான் நமது முந்தய ஆண்டு +2 முடிவுகள் வெளியானது.
தேர்வு முடிவுகளையும், மாணவிகளின் பிரச்சினைகளையும் District Social Welfare Officer, Chennai அவர்களுக்கு விளக்கும் போது, அவரே ஒரு பெரிய யோசனை சொன்னார். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடைவெளி குறைய வேண்டுமானால் ஒரு Parents - Meeting arrange பண்ணுங்க. அதுவும் இந்த Camp - லயெ பண்ணிட்டா நம்ம Problem இந்த Batch க்கு Continue ஆகாது" என்ற தீர்வை கொடுத்தது மட்டுமல்ல, அதற்கான அனுமதியையும் கொடுத்தார்.

மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் யோசனைப்படி நாம் மே 31 ம் தேதி சனிக்கிழமை ஒரு Meeting ஏற்பாடு செய்தோம். அரசு குழந்தைகள் காப்பக வரலாற்றில் முதன்முறையாக மே 31 ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் ஒரு சரித்திரத்தை தொடங்கி வைத்தது. Summer Camp ல் கலந்து கொண்ட 25 மாணவிகளில் மொத்தம் 19 மாணவிகளின் பெற்றோர்/உறவினர்கள் கலந்து கொண்டது நமக்கு மட்டும் அல்ல, அந்த மாணவிகளுக்கே வியப்பு தான்.

இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு முறை கூட தங்களை அழைத்ததில்லை! ஏன் இப்போது முதல் முறையாக என்ற கேள்வியோடு அனைத்து பெற்றோர்களையும், மாணவிகளையும் ஒன்றாக அமரவைத்தோம்.

இந்த Meeting ஏன் என்ற காரணத்தையும், SMILE என்பது யார், இத்தனை வருடம் இந்த காப்பகத்தில் என்ன செய்கிறோம், ஏன் SMILE ஐ ஆரம்பித்தோம், SMILE கடந்து வந்த பாதை, தற்போதய பிரச்சினைகள், தேர்வு முடிவுகள், எதிர்கால திட்டம், SMILE Summer Camp ,இந்த ஆண்டு மாணவிகளின் நிலை, அவர்களை பற்றிய SMILE ன் கனவு என அத்தனையும் பேசப்பட்டது பெற்றோர்களிடம் முதன் முறையாக...

இந்த அறிமுகத்திற்கு பிறகு ஒவ்வொரு பெற்றோர்களிடமும் சில கேள்விகளைக் கேட்டனர் SMILE PP Volunteers. இதில் முக்கியமானது, அவர்கள் தங்கள் பிள்ளைகளை மேற்படிப்பிற்கு அனுப்பி வைக்க விரும்புகிறார்களா, தங்களது பிள்ளைகளை பற்றிய எதிர்கால திட்டங்கள் என்ன, அவர்களின் எதிர்பார்ப்பு என அத்தனையும் கேட்டது. மாணவிகளின் இன்றைய நிலையையும் அவர்களின் பிரச்சினைகளையும், அவர்கள் படிப்பின் நிலையையும் எடுத்து சொன்னோம்.

நமது கேள்விகளுக்கு ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களது ஆசைகளையும், கனவுகளையும் அழுது கொண்டே சொன்னது நமக்கு மட்டும் அல்ல அவர்களின் குழந்தைகளுக்கே ஆச்சரியம் தான்.
"நான் உயிரோடு இருக்கிறதே அவளுக்காகத்தான் என்ற தாயின் அழுகை" , "இவளை பார்ப்பதற்காகவே மாதம் ஒரு முறை Delhi ல இருந்து வந்து போகிறேன் என்ற ஒரு அண்ணனின் ஆதங்கம்",
தங்களது பழைய கால கஷ்டங்களையும், அவமானங்களையும் பட்டியல் போட்ட அனைவரின் குரலும் நம்மை கரைய வைத்தது.
அடுத்து மாணவிகளும் ஒவ்வொருவராக பேச ஆரம்பித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை பெற்றோர்களிடமும், நம்மிடமும் அழுகையோடே சொன்னார்கள். அன்றைய தினம் அவர்கள் அழுததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருந்தது. பின்னர் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுடன் தனித்தனியே பேசி நம்மிடம் வந்தார்கள். இந்த இணைப்பின் இறுதியாக அனைவரின் சம்மதத்துடன் நாம் எடுத்த சில முடிவுகள்:
1) ஒவ்வொரு மாதமும் பிள்ளைகளின் மதிப்பெண் பட்டியலை வீட்டிற்கு அனுப்புவது.
2) இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பெற்றோர் வந்து நேரில் சந்திக்க வேண்டும்.
3) எந்த சூழ்நிலையிலும் மாணவிகளின் படிப்பை பாதிக்கும் செயல்களை செய்ய கூடாது.
4) மாணவிகளின் மேற்படிப்பிற்கு முழு ஆதரவு கொடுப்பது.

இப்படி ஒரு புது முயற்சியை அன்றைய தினம் தொடங்கிவைத்த SMILE, இந்த மாதம் நடக்கவிருக்கும் முதல் தேர்வின் மதிப்பெண் பட்டியலை அனுப்ப தயாராய் இருக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி ஒவ்வொரு வகுப்பாக இதை தொடரவும் முடிவு செய்திருக்கிறது.

நம்பிக்கையுடன் ,
PP Team

4 comments:

gils said...

hmmm...oray vazhi..neria test vaikrathu than..enkita sila ideas iruku..i used to take maths tuition a while back..apo neria tests vaipen..athula oru thadava attend panna kostina adutha testla choicea eduka allow pana maten..teriatha kostina avanga try pananum..infact naan choicey thara maten kostinsla..all kostins within the given time athaan aim..180ku evlo vangaraganganu paathu..athula thappagara kostinsa thiruthi taruven..it showed gud results. lowest mark was 80 and it was across 3 years. naan eduthathu 10th pasangaluku. en tuition sir 12thku itheye try pannar..it showd gud results there too. maybe inga apply pannalama?

Gunasekaran Sabarmathi said...

Vov that was great Gils. Yes we will try to do this time. Actually the thing is we need to concentrate individually. Thats were we are missing. Lets try to achieve this time. Thanks for the info.

gils said...

unga mail id thangalaen...

Gunasekaran Sabarmathi said...

My mail id:
agunasek@visteon.com
gunasekaran.apr19@gmail.com