SMILE WELFARE FOUNDATION

In SMILE
we strongly believe that
- Service is not something superficial
- We do NOT adopt we get adopted
- We do NOT sacrifice we just share
- We do NOT donate we are in turn blessed
For more info on SMILE please visit SMILE

Sunday, December 21, 2008

Kanchi PDC - Writeup by Vallikanthan

காஞ்சியில் ஒரு காவியம்
எத்தனையோ சரித்திர நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ள காஞ்சியின் சரித்திரத்தில் "மணிமகுடமாய்" அமைந்தது 22, 23 அன்று நடைபெற்ற SMILE PDC.
"அன்னசத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தரிவித்தல்"
என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க கல்விப்பணியை கடவுள் பணியாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்மைல் தன்னுடைய கல்விச்சேவையை காஞ்சியில் இந்த முதல் PDC முகாம் மூலம் துவங்கியிருக்கிறது. ஸ்மைல்-ன் இந்த PDC முகாம் மூலம் கோவில்களுக்கும் பட்டுசீளைகளுக்கும் பல்லவச்சிற்பங்களுக்குமே பெயர் போன "காஞ்சி" கல்வியிலும் தனக்கென "தனிமுத்திரை" பதிக்கத் துவங்கி இருக்கிறது.
"லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக நிகழ்ச்சிகளைத் தருவதில் SMILE கு நிகர் SMILE தான்.
" நீ எந்த ஊரு......
நான் எந்த ஊரு......
முகவரி தேவையில்ல" என்று விஜய் பாணியில் நித்தியும் காஞ்சி குழந்தைகளும் மாற்றி மாற்றி கலாய்க்க இறுதிவரை அறிமுகம் இல்லாமலே அறிமுகமானது PDC.
இந்துக்களுக்கு " ஓம் நமசிவாய"
முஸ்லிம்களுக்கு "அல்லாஹு அக்பர் "
கிறிஸ்துவர்களுக்கு "அலேலூயா"
இந்தியனுக்கு "ஜெய் ஹிந்த் "
SMILE-கு "எசெபகுவா" (எண்ணம், செயல், பழக்கம், குணம், வாழ்க்கை)
ஸ்மைல்-இன் இந்த "எசெபகுவா" தான் காஞ்சி குழந்தையின் இன்றைய தாரக மந்திரம். காலைப்பொழுது "எசெபகுவா"வுடன் ஏகத்துக்கு தூள் கிளப்ப "உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு " மதிய உணவுக்குப் பிறகு சற்றே தொய்வடைந்து இருந்த பிஞ்சுகளைத் தட்டி எழ வைத்தது குணாவின் "சிலையும் நானே சிற்பியும் நானே" .
"வெற்றிப் பாதையை நோக்கிப் பயணிக்க
தங்களை தாங்களே செதுக்கிக் கொள்ள ஒரு
தன்னம்பிக்கை உளியாக இருந்தது" குணாவின் அதிரவைக்கும் பேச்சு.
புயலுக்குப் பின் அமைதி என்பார்கள்.
ஆனால் இங்கு "அமைதிக்குப் பின் புயல்". ஆம். அதுவரை அமைதியாகவே இருந்த தினேஷ் "காந்திக்கும் நமக்கும் என்ன ஒற்றுமை. அவருக்கும் 24 மணி நேரம் தான். நமக்கும் 24 மணி நேரம் தான். ஆனா அவரு காந்தி -- நாம? என நேர நிர்வாகத்தைப் பற்றி வேகத்தில் கேள்விகளைத் தொடுக்க ஒட்டுமொத்த கூட்டமும் ஒரு நிமிடத்தில் திக்குமுக்காடித்தான் போனது. காலம் பொன் போன்றது என்பதை எல்லா குழந்தைகளும் உணரும் வகையில் அமைந்திருந்தது தினேஷின் அந்த ஒரு மணி நேர பேச்சு.
சீரியசான விஷயங்களுக்கு நடுவே ரிலாக்சாக எதாவது வேண்டாமா ?
ஏன் இல்லை. அது தான் இருக்கிறார்களே அபூர்வ சகோதரர்கள் போல கோபியும் சங்கிலியும். அவர்கள் வைத்த வைட்டமின் போட்டி சோர்ந்து போன மாணவர்களுக்கு உண்மையிலேயே வைட்டமின்னாகத்தான் இருந்தது.
[குறிப்பு: வைட்டமின் சம்மந்தமான பாடல்களை மாணவிகளுக்கு எழுதிக்கொடுத்து "காஞ்சியில் கவிஞர்" பட்டம் பெற்ற "காவியத் தலைவர்கள்" வாசு , சுப்பு]
ஒரு நாவலை முழுசா படிச்சிட்டு கடைசி அத்யாயத்தை மட்டும் படிக்காம இருந்தா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது முகாமின் முதல் நாள் முடியும் போது. அடுத்தது என்ன ? என்ன? என்ற ஏக எதிர்பார்போடு காத்திருந்த நமக்கு "கட கட , பட பட , சுறு சுறு , விறு விறு, 'சின்னக் குயில்' குட்டி திவ்யாவின் கந்தர் சஷ்டி பாடலுடன் அமர்க்களமாகவே துவங்கியது இரண்டாம் நாள்.
'காஞ்சி' என்றாலே முதலில் ஞாபகம் வருபவர் 'அறிஞர்' அண்ணா . அண்ணா என்றாலே ஞாபகம் வருவது அடுக்கு மொழிப் பேச்சு.
ஸ்மைல் PDC என்றாலே ஞாபகம் வருவது நித்தி அண்ணா. நித்தி என்றாலே ஞாபகம் வருவது தன்னம்பிக்கை டானிக்கான அவரது பேச்சு.
தோற்றம், தாழ்வு மனப்பான்மை , தன்னைத்தான் அறிதல் குறித்து அவர் நடத்திய நாடகங்களும், உரையாடல்களும் தான் இந்த ரெண்டு நாள் படக் யின் சிறப்பு.
ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக நித்தி வழங்கிய 'தவளை', 'கழுதை', 'கரப்பான்பூச்சி', 'பன்றி' ஆகிய தலைப்புகளில் தவளையாகவே தாவிகுதித்த பத்தாம் வகுப்பு சத்யப்ரியாவுக்கும் பன்றியின் அவதாரமெடுத்த 12-ஆம் வகுப்பு தேவிக்கும் ஏக கரகோஷங்கள்.
"கடைசி வரிசையில் உட்கார்றது தப்பில்லை. கடைசிவரை என்ன கவனிக்கிறோம் என்பதுதான் முக்கியம்"
கவனத்தை (Concentration) அடிப்படையாகக் கொண்ட மாணவர்களுக்கு வகுப்பெடுத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தான் கவிஞர் சுப்பு!!
"ஒருவரின் காலடி சுவடுகளை பின்பற்றுங்கள். அவர் கால் கோணல்களை பார்க்காதீர்கள்" என்ற கவிஞரின் கருத்து அட்சர லட்சம் பெரும்.
காவிய நிகழ்ச்சியான இந்த PDC யில் ஆச்சர்யமூட்டும் அரங்கேறிய இரு முக்கிய நிகழ்வுகள்.
1) இதுவரை எத்தனையோ முறை அழைத்தும் பேசாமலிருந்த பேசா மடங்தைகளான +2 பாக்கியலக்ஷ்மி மற்றும் 10 ஆம் வகுப்பைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி , தேன்மொழி , ஆகியோர் தாங்களாகவே முன்வந்து Feedback சொன்னது.
2) தன் இதயநோயால் சோர்ந்து இருந்த +2 மகேஸ்வரி தன்னம்பிக்கையோடு நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
மாற்றம் மட்டுமே நிலையானது என்பதை இந்த PDC முகாம் மற்றுமொரு முறை நிறுபித்தது. துவக்கம் முதலே தன் 'குண்டக்க மண்டக்க' கேள்விகளால் நித்தியுடன் சேர்ந்து 'காமெடி தர்பார்' நடத்திய 9-ஆம் வகுப்பு திவ்யா இறுதியாக 'எனக்கு அண்ணன்களோ அக்காக்களோ இல்லை. நான் இந்த ரெண்டு நாள் இங்க வந்ததுனால எனக்கு இத்துணை அக்கா அண்ணன்கள் கிடைச்சிருக்காங்கன்னு சந்தோசமா இருந்தேன். ஆனா இப்ப உங்களைப் பிரியும் போது " என முடிக்கும் முன்பே தாரயாய் கண்ணீர்! அங்கிருந்த அனைவரும் அந்த நொடி கலங்கித்தான் போனார்கள் (இது அன்பு கலந்த ஆனந்தக் கண்ணீருங்கோ!!)
PDC முகாம் நிறைவுறும் அந்த வேலையில் அனைவரது முகங்களும் பிரிவு என்ற உணர்ச்சியால் வாடி இருந்தாலும் "இதுவரை நாங்கள் இழந்தது செருபுக்கள்தான் , பாதகங்கள் அல்ல" என்ற தன்னம்பிக்கை ஒளி ஒவ்வொரு கண்களிலும் சுடர் விடுவதை நம்மால் உணர முடிந்தது.
"எண்ணம் சொல்லல்ல , செயல்!!" என்பதற்கிணங்க எதிர்கால "காஞ்சித் தலைவர்கள்" நம் எண்ணங்களை சொற்களில் மட்டுமின்றி செயல்களிலும் செய்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு நம் பயணத்தில் நாம் பயணிப்போம்!!!
நினைவுடன் ,
PDC Team.

2 comments:

gils said...

indha mathiri program pathi munadiye oru curtain raiser post poata vasathiya irukumay :)

karthick said...

HI
i think we really missed this experience...
But we can imagine what happened there.. Valli's words are really great. enna nadanthathunu kan munnadi kondu vanthu nirutheeteenga:-) We expect more writeups from u valli.....
By
Karthick.
:-)