SMILE WELFARE FOUNDATION

In SMILE
we strongly believe that
- Service is not something superficial
- We do NOT adopt we get adopted
- We do NOT sacrifice we just share
- We do NOT donate we are in turn blessed
For more info on SMILE please visit SMILE

Wednesday, December 17, 2008

3rd Year Anniversary Writeup - Vallikanthan

SMILE WELFARE FOUNDATION
3'rd year Anniversary Tamil Write Up

சுடர் மிகு அறிவுடனும் பிரமிக்க வைக்கும் ஆற்றள்களுடணும் எத்தனையோ
ஆயிரம் ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகள் நம் இந்திய சமூகத்தின் காப்பகங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சுடர்விளக்காயினும் தூண்டுகோள் தேவை என்பதற்கிணங்க திறமைமிக்க இந்த குழந்தைகளை கை கொடுத்து தூக்கி அவர்களை வழிநடத்தும் ஓர் ஒப்பற்ற சேவையினை சட்டவிதிகளுக்குட்பட்டு சுமார் 3 ஆண்டுகளாக தொய்வின்றி செய்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தான் SMILE WELFARE FOUNDATION.

சென்னை பெசன்ட்நகர் கடற்கரை தினம் தினம் எத்தனையோ மணல் வீடுகளை பார்த்திருக்கிறது. ஆனால் ஏப்ரல் 4, 2004 அன்று வெறும் இருபது இளம் பொறியாளர்களால் கட்டப்பட்ட மனிதநேய வீடு தான் இன்று SMILE என்ற மாளிகையாக மலர்ந்துள்ளது. எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் சமூக சேவையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து சற்று மாறுபட்டுத்தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட 700 குழந்தைகளின் கல்வி பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்து அவர்களை வழிநடத்தி வரும் SMILE உறுப்பினர்கள் அனைவருமே தொழிற்துறை மற்றும் கணிப்பொறி மென்பொறியாளர்கள்.

கணிப்பொறி மென்பொறியாளர்கள் என்றாலே பணம் கொழிக்கும் மேல்மட்ட வார்க்கத்தினர் கலாசாரத்தை சீர்கெடுப்பவர்கள் என்று கருத்து நிலவி வரும் இந்த காலகட்டத்தில் இந்த கூற்றை பொய்ப்பிக்கும் வகையில் SMILE உறுப்பினர்களின் சமூக அக்கறைகொண்ட இந்த பார்வை வியப்பளிக்கத்தான் செய்கிறது.

வாரம் முழுவதும் வேலைபலுவை சுமக்கும் இவர்கள் வார இறுதியில் அந்த குழந்தைகளின் உணர்வுகளையும் சுமந்து அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பாடுப்பாடுகிறார்கள்.

"அன்னச் சத்திரம் ஆயிரம் கட்டுதலைவிட ஆலயங்கள் பதினாயிரம் எழுப்புதலைவிட அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே சாலச் சிறந்தது"

என்ற எட்டயபுரத்தானின் எடுகோளுக்கிணங்க

திறமைமிக்க வசதிவாய்ப்பற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக
சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்கள் இளைஞர்களுடன் கைக்கோர்த்து SADHANA என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதற்கு முன்பே SMILE அமைப்பினர் புன்னகை பாலம், அட்சயா போன்ற திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனயோ தடைக்கர்களைப் படிகற்கலாக மாற்றி வரும் ஏப்ரல் 1 2007-ல் 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது SMILE.

இவர்கள் மைல்கல்லாய் கருதும் SADHANA திட்டத்திற்காக தமிழகத்திலுள்ள முழுநேர பகுதிநேர தகவல்த்தொழில்நுட்ப நிறுவனங்களிலுல்ல தன்னார்வளர்களுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வி என்ற கருத்தரங்கினை அன்றைய தினம் நடத்தி அவர்களின் எண்ணங்களோடும் ஒத்துழைபோடும் தன் புதிய பயணத்தை தொடங்க உள்ளனர்.

ஒற்றுமையே வலிமை என்பதை இவர்களின் இந்த முயற்சி மெய்ப்பிக்குமா ?....

சிகரத்தை நோக்கிய இவர்களின் இந்த கூட்டு முயற்சி சமுதாயத்தின் மாற்றத்திற்கு வித்திடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்.

No comments: