புன்னகை பாலம்
மூன்றாண்டுகளாய் அடங்கிக் கிடந்த
எங்கள் கற்பனைகளையும் கனவுகளையும்
நிஜமாக்க புறப்பட்ட பேனாக்கள் நீங்கள் !
நீங்கள் எழுதியது "SMILE EXAM"
ஆனால்,
நாங்கள் எழுதுவது எங்களின் அடுத்தகட்ட
வளர்ச்சிக்கான நுழைவுத்தேர்வு உங்கள் மூலமாக .......
எங்களுக்காக உங்கள் கண்கள் எத்தனை இரவு விழித்திருக்கும் ... எங்களுக்காக உங்கள் கைகள் எத்தனை தேர்வு எழுதியிருக்கும்...
எங்களுக்காக உங்கள் கால்கள் எத்தனை முறை ஓடியிருக்கும்...
உங்களின் முயற்சிக்கு வெற்றி உண்டு நிச்சயம் .....
எங்களுக்கு முன்னுரை எழுதிய உங்களுக்கு
வெற்றியெனும் முடிவுரை எழுத காத்திருக்கிறோம் !!
வாழ்த்துகளுடன்
SMILE
No comments:
Post a Comment