SMILE WELFARE FOUNDATION

In SMILE
we strongly believe that
- Service is not something superficial
- We do NOT adopt we get adopted
- We do NOT sacrifice we just share
- We do NOT donate we are in turn blessed
For more info on SMILE please visit SMILE

Tuesday, February 10, 2009

First Deepavali Celebration by SMILE (07-nov-2006) - by Guna

தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னாடி Waltax Home-ல இருக்க ஒரு பொண்ணுகிட்ட " தீபாவளி அப்ப என்னமா பண்ணுவீங்கன்னு" கேட்டப்ப சொன்ன பதில்

" என்ன பண்ணபோறோம். நாள் முழுக்க டிவி தான். பட்டாசுன்னா ரொம்ப பிடிக்கும்..ஆனா எங்க போறது...வெளிய போய் எதிர்வீட்டு பசங்க வெடிகிரத நின்னு பார்ப்போம்..பக்கத்து வீட்டு மாடில இருந்து தூக்கி போட்டா அதை வெடிப்போம்...எனக்கு தெரிஞ்சு எல்லா வருஷமும் இப்படித்தான் போகுது"-ன்னு சொன்னப்ப நொந்துட்டேன்.

வந்த வேகத்துல வாழ்க்கையிலேயே அந்த பசங்கன்னு இல்ல வேற எந்த பசங்களும் கொண்டாடாத தீபாவளிய நாம கொண்டாடனும்னு SMILE Team-கிட்ட சொன்னப்ப "கரும்பு தின்ன கூலியான்னு" ஒரு படை அப்பவே வேலைய ஆரம்பிச்சிடுச்சு. பண்ணனும்னு முடிவு பண்ணியாச்சு ஆனா SMILE Amount-ல இருந்து அவளோ பண்ணனுமான்னு ஒரு Counter View வரவே....சரி..இதுக்குன்னு சொல்லி friends கிட்ட சொல்லி collect பண்ணிட்டா பிரச்சனை இல்லைன்னு நினைச்சி Onsite மக்கள் கிட்ட சொல்ல அவங்க அடுத்த நாளே தேவையான amount அனுபிட்டாங்க. இருந்த ஒரு பிரச்சனையும் solve ஆனதால as usual SMILE brand ல இந்த function-a நடத்த ஆரம்பிச்சோம்.

இரண்டு home....350 பசங்க....குழந்தைங்க 100 பேர்..பெரியவங்க 250 பேர்... அதனாலேயே தெளிவா plan பண்ணி ஒவ்வொரு குழந்தைக்கும் தனி packet ல ஒரு 50 - 70 ரூபாய்க்கு பட்டாசுன்னு பட்டாசு செலவே 15000 ரூபாய். இது போக Sweet, மதியம் special சாப்பாடுன்னு அமர்க்களம் தான்.
Since most of them are girl students we preferred Night Crackers alone in our collection. தீபாவளி starts with SMILE meeting in Kosapet home. இந்த நேரத்துல Waltax home பசங்களும் அங்க van-ல வந்து சேர்ந்தாங்க. மதியம் வட பாயாசத்தோட சாப்பாடு பசங்களோட எல்லாம் ஒண்ணா உட்கார்ந்து சாப்டோம். அப்புறம் அவங்களுக்குன்னு special-a arrange பண்ண படம் "King Kong" ஆரம்பிச்சுது. 'ஆ... ஊ ...-ன்னு ' ஒரே சத்தம்....பசங்க அலறிக்கிட்டு, சிரிச்சிக்கிட்டு பெரிய screen-ல இப்படி ஒரு படம்...இது அவங்களுக்கு ஒரு புது அனுபவம் (எங்களுக்கும்). கடைசில King Kong இறந்தப்ப ஒரு சிலர் அழுதுட்டாங்க. ஒரு Hero இறந்தா அழுற மாதிரி தேம்பி தேம்பி அழ ஒரு வித Self Satisfying உணர்வு எங்களுக்கு வந்துடுச்சு.
6-மணிக்கு சினிமாவோட Climax மாதிரி பட்டாசுகளை Van-ல இருந்து இறக்கும் போதே பசங்க முகத்தில 1000 Wala. பட்டாசுன்றதால விபரீதம் எதுவும் நடந்துட கூடாதுன்னு பயம் வேற. அதனால ரெண்டு ரெண்டு standard - ஆ பட்டாசு வெடிக்க வெச்சு மீதி பேர வேடிக்கை பார்க்க வெச்சோம். கால வைக்குற இடம் எல்லாம் ஒரே புஸ்வானம் வர தெகச்சு நின்னுடோம். ஒரு முறை எந்த பக்கம் பார்த்தாலும் புஸ்வானம், சங்கு சக்கரம்தான். ஏதோ சொர்க்கத்தில் இருக்குற மாதிரி ஒரு உணர்வு. சின்ன பசங்க எல்லாரும் வந்து 'Hands up, Hands up' - ன்னு துப்பாக்கி வெச்சு மிரட்டினப்ப(?)....
Round - ஆ புஸ்வானம் வெச்சு, ஒரே நேரத்தில சுத்த வெச்சு இது 'Square-a , Rectangale' - ஆன்னு ஒரே ஆட்டம் தான். இரண்டரை மணி நேர Non stop கொண்டாட்டம் முடிக்க மனசே இல்லாம முடிஞ்சுது.
"இப்படி ஒரு தீபாவளிய நாங்க கொண்டாடினதே இல்ல. ரொம்ப Thanks- ன்னு ஒரு குரல் கேட்டு திரும்பிய போது திகைத்தோம். அப்படி சொன்னது ஒரு SMILE Member. நமக்கே இப்படின்னா பசங்களோட feeling-a சொல்லவே தேவை இல்ல. இந்த குழந்தைங்க மட்டும் இல்ல வேற எந்த குழந்தைங்களும் கொண்டாடாத தீபாவளிய கொண்டாடிய சந்தோஷத்தில்

SMILE............



No comments: