பூக்களின் புன்னகைக்காய், புன்னகைப்பாலத்தின் புதியதோர் முயற்சி இந்த எண்ணங்களின் சங்கமம்.
பூக்களின் எதிர்காலத்தைப் பற்றிய தங்களின் எண்ணங்களையும், கனவுகளையும் வெளிப்படுத்தும் ஓர் அறிய அரங்கமாய் அமைந்தது 12-10-2008 அன்று Waltax - ல் நடந்த "Train the Trainers".
புன்னகைப்பாலம் தன் 4 வருடப் பயணத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்காய் ஆயிரம் ஆயிரம் முயற்சிகளை எடுத்திருக்கிறது. அவற்றில் இழந்தது, பெற்றது, வெற்றி, தோல்வி, இப்படி செய்திருக்கலாம் , இப்படி coaching கொடுத்திருக்கலாம், நம் அணுகுமுறை சரியானதா? இப்படி எத்தனையோ கேள்விகளையும் எண்ணங்களையும் தங்களுக்குள் புதைத்து வைத்திருந்த தன்னார்வலர்களுக்கு அவற்றையெல்லாம் வெளிப்படுத்த சரியானத் தருணமாய் அமைந்தது இந்த "Train the Trainers".
புயல் மையம் கொண்டிருக்கிறது என்ற போதும் அடாத மழையிலும் விடாது குடைப்பிடித்து சூறாவளியாய் சுழன்று வந்தனர் நம் புன்னகை பாலத்தின் தன்னார்வலர்கள். சொட்ட சொட்ட நனைந்தாலும் நாங்கள் சொன்ன சொல் தவறமாட்டோம் என்பது போல் இருந்தது அவர்கள் வருகை.
ஆரம்பம் "பத்திரை" என்றாலும் ஒவ்வொருவரின் கருத்துக்களும் விவாதங்களும் "தனி முத்திரை" பதித்தது.
"அனுபவம் மனிதனைச் செதுக்கும்" என்பார்கள். ஆம், குணாவின் நான்கு வருட கணித அனுபவம் அவரை கணக்கு போட்டு வேலை செய்ய வைத்திருக்கிறது இந்த வருடம்.
"Basic" மட்டும் வெற்றி அல்ல , Students - ன் Psychologic - யும் சேர்த்தால் தான் வெற்றி. Basic - ஓடு பாடம் நடத்துங்கள். ஆனால் அவை exam point of view - ல இருந்தால் நம்ம பசங்க easy - ஆ observe பண்ணிப்பாங்க. நாமெல்லாம் எல்லா Basic - உம் தெரிஞ்சா படிச்சோம், பின்னாடி தெரிஞ்சிக்கலையா , அந்த மாதிரி தான் அவங்களும் தெரிஞ்சிப்பாங்க. இப்ப நாம பண்ண வேண்டியது exam point of view - ல motivate பண்ணாலே போதும்.
போன வருஷம் இப்படி Basic - strong ஆகனும்னு வெயிட் பண்ணேன். ஆனா 180+ தான் பசங்க எடுத்தாங்க. காலாண்டுல எல்லாம் 120 தான் எடுத்தாங்க. ஆனா இந்த வருஷம் exam point of view - ல முக்கியமான 10 marks, 5 marks, 2 marks - ன்னு தனித்தனியா இப்பவே Test வைக்க ஆரம்பிச்சுட்டேன். இப்ப காலாண்டுல 165+ ரெண்டு பேர் எடுத்திருக்காங்க. Average- ல எல்லாருமே 100+ வாங்கி இருக்காங்க. இந்த method workout ஆகும்னு நினைக்குறேன். இது என்னோட opinion என்று நளினமாய் நயம்பட எடுத்துரைத்தவர் நம் நம்பிக்கை நாயகன் குணா.
" தெளிவான திட்டம், ஆழ்ந்த அறிவு, அன்பு என்ற ஆயுதம்" இவைகளை மட்டுமே தன் மூலாதாரமாய் கொண்டு அமைதியான முறையில் அறிவியலையும், இயற்பியலையும் அறிவுறுத்திக் கொண்டிருப்பவர் நமது 'PP' யின் Punctual Prabu ( விடாத மழையிலும் Punctual - அ 9.00 மணிக்கே ஆஜர்).
"குணா method தான் நானும் follow பண்றேன். இப்ப 4 பாடம் Physics - ல படிச்சாலே எல்லா 10 marks - யும் attend பண்ண முடியும். இவங்களுக்கு இப்ப தேவை marks தான்" என ரத்தினச் சுருக்கமாய் தனக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் சுருக்கமாய் முடித்துக்கொண்டர் பிரபு.
நம் "கொசப்பேட்டையின் சிங்கம்" சிலிர்த்தது இந்த 'எண்ணங்களின் சங்கமத்தில்' தான். "மொழிப் பாடங்களுக்கு SMILE ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? அவைகளும் Marks Scoring Papers தானே" என்ற கேள்வியை கேட்டு ஒட்டுமொத்த தன்னார்வலர்களையும் விவாதத்திற்கு அழைத்தவர்
நம் குரு.
சுப்பு, ராஜேஷ், ரஞ்சித், தங்கள் எதிர் கேள்விகளைத் தொடுக்க 'விவாதம் எல்லாம் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தான்' என அன்புக் கட்டளையிட்டார் நம் அன்பர் பிரபு.
"நாமெல்லாம் மீண்டும் ஏன் 6th, 7th, 8th படிக்கக் கூடாது . நமக்கெல்லாம் இவங்க class எடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஆவலை PP team - ன் அத்தனை பேரிடமும் ஏற்படுத்தியது புன்னகைப் பாலத்தின் புதிய படை. V.V.மோகன் & கோ - வின் "SHIKSHA" செயற்பாடுகள், தங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றிய அவர்கள் எடுத்தாண்ட விதம் , இந்த எண்ணங்களின் சங்கமத்திற்கு ஓர் மணிமகுடம்.
செவிக்கு உணவில்லாதப் போது சிறிது
வயிற்றுக்கு ஈயப் படும் - ஆனால் அன்று செவிக்கு உணவிருந்தப் பொழுதும் சற்றே வயிற்றுக்கும் ஈய இசைந்தனர் நம்மவர்கள்.
"காரசாரமான உணவுடன் காரசாரமாய் தொடங்கியது விவாதம்" . சுப்பு, ரஞ்சித், ராஜேஷ், இம்மூவேந்தர்கள் கூட்டணி காலையில் பேசியவர்களின் கருத்துக்களை முன்வைத்து ஒரு சொற்போரே இந்தியா.
நாமெல்லாம் நம்முடைய point of view student - அ guide பண்றதவிட , அவங்களுக்கு சில பிரச்சனை இருக்கும் , அது என்னன்னு தெரிஞ்சு அவங்கள
guide பண்ணனும். ஒவ்வொருத்தரோட பிரச்சனை என்னன்னு தெரிஞ்சிக்க Individual Counselling பண்ணனும். அப்பதான் அதுக்கேத்த மாதிரி அவங்கள guide பண்ண முடியும். இதத்தான் இப்ப நானும் சுப்புவும் 10th பசங்களுக்கு start காத்திருக்கும். இது ஓரளவிற்கு effective response தருது" என தன்னுடைய
முயற்சியை விவரித்தார் ராஜேஷ்.
இத்தகைய விவாதங்களும், கருத்து பரிமாறல்களும், விமர்சனங்களும் தான் வெற்றிக்கான முதல் படி என நன்கு உணர்ந்து ஆரோக்கியமான விவாதத்தையும் ஆரோக்கியமான கருத்துக்களையும் வெளிப்படுத்த காரணமாய் இருந்த "PP - Team" ற்கு ஒரு ஹாட்ஸ் - ஆஃப்.
" முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வானத்தில் கூட கால்தடம் பதிக்கலாம்" . முயற்சியோடு மட்டும் இருந்த நம் புன்னகைப் பாலம் இந்த எண்ணங்களின் சங்கமம் மூலம் நல்லதோர் பயிற்சியும் பெற்றிருக்கிறது.
இதுவரை நாம் இழந்தது செருப்புக்களைத் தான்
பாதங்களை அல்ல !
நம் பாதங்கள் இந்த பயிற்சியோடு வெற்றிகான பாதையைத் தேடும் என்ற நம்பிக்கையில், வெற்றிக்கான பாதையில் புன்னகையோடும்
பூமாலைகளோடும் காத்திருப்போம்.
No comments:
Post a Comment