"ஒரு கை தட்டினால் ஓசை வராது
இரு கை இணைந்தால் "இமயம்" கூட இடுப்புக்குக் கீழே"
ஆம். இது நூற்றுக்கு நூரு உண்மையாகும் வகையில் அமைந்தது 07/06/09 அன்று செய்யாறில் "CSS" மற்றும் "SMILE" இணைந்து நடத்திய "CSS Sadhana '09" மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு. கடந்த ஆண்டு தமிழ்மணி(1144), ராதிகா(1068) என்ற இரு விதைகளை CSS welfare foundation-ல் விதைத்த நாம் இந்த ஆண்டு "15 விதைகளை" விதைக்கத் திட்டமிட்டோம்.CSS-ன் சம்மதத்துடன் "பெருங்கட்டுர்","கடலாடி",ஜம்னாமரதூர்",அனப்பத்துர் உள்ளிட்ட செய்யாரைச் சுற்றியுல்ல கிராமங்களிலிருந்து சுமார் 44 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்காய் அழைக்கப்பட,
"கையில் செல்லும் முகத்தில் பல்லும்" இல்லாமல் இருக்கவே முடியவில்லை நம்மால். அப்படி ஒரு மாணவக் கூட்டம்.பொதுவாக SMILE function (அ) meeting என்றாலே minimum 1/2 hour ஆவது லேட்டாத்தான் ஆரம்பிப்போம். ஆனால் அன்று 10 மணி என்று சொல்லியிருந்தோம் சுமார் 9 மணிக்கே மாணவர்படை அலைமோத ஆரம்பித்துவிட்டது.
Waltax , Kospet home-களில் நாம் போய் மாணவர்களுக்காய் wait பண்ணும் நிலைமாறி இங்கு நமக்காய் கிராமப்புற மாணவர்கள் 1/2 மணி நேரமாய் காத்துக்கிடந்தர்கள்(அடடா கிராமம் கிராமம் தான்!).
"இந்தியா 2020" என்ற கலாமின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை இந்த கிராமப்புற மாணவர்களைப் பார்த்த பிறகு.
44 மாணவர்களில் சுமார் 40 மாணவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு மேல். "கல்வி கண் போன்றது" என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படும் இது போன்ற மாணவர்களுக்கு ஒரு "ஹாட்ஸ் ஆப்".
கேள்விக்கணைகளோடு entry ஆன "PPRR Head" Rajesh அவர்களின் தலைமையில் நேர்முகத் தேர்வு தொடங்க, இந்த "நேர்முகம்" கிராமங்களின் பல முகங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது என்றால் அது மிகையாகாது.
"வறுமை","எளிமை","கடமை","உண்மை","அறியாமை" என கிராம மாணவர்களின் "பலமுகங்கள்" நம்மை புல்லரிக்கவும் வைத்தது. இந்த நேர்முகத்தேர்வில் நம்மையெல்லாம் வேதனைப்பட வைத்தவர்கள்" ஜம்னாமரத்தூர்" பள்ளி மாணவர்கள்.
இயற்கை எழில் சூழ்ந்த மலைவாழ் கிராமமான ஜம்னா மரத்தூர் சுற்றி 20ற்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள். இந்தக் கிராமங்களிலிருந்து மாணவர்கள் எல்லாம் 15கி.மீ. தொலைவிலிருந்து நடந்து வந்தால்தான் அவர்களுக்கு "உயர்கல்வியே". இக்கிராம மக்கள் பெரும்பாளும் மலை சம்பந்தமான கூலி வேலை செய்பவர்கள். இக்கிராமங்களில் கொடுமையின் உச்சமாய் "அரசு நடுநிலைப்பள்ளிகள்" மட்டுமே உள்ளன.
உயர்கல்வி கற்க வேண்டுமானால் "அத்திப்பட்டு" என்ற கிரமத்திலுள்ள "செயிண்ட் ஜோசப்" தனியார் பள்ளிகளுக்கு வந்தாக வேண்டும்.
20 மலைவாழ் கிராமங்களுக்கு ஒரே ஒரு அரசு உயர்பள்ளியோ, மேல்நிலைபள்ளியோ இல்லாதது வெட்கக்கேடான ஒரு நிலையாகும்.
(உயர் கல்வி அமைச்சரே உங்க பார்வையை இக்கிராமங்கள் பக்கமும் கொஞ்சம் காட்டுங்க).
இப்படிப்பட்ட சூழலிருந்து 5 மாணவர்கள் 1050 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வழிநடத்த ஆட்கள் இன்றி அங்கிருக்கும் ஒரு சில ஆசிரியர்கள் மூலம் நம்மை நாடி வந்தனர்.
முதலாவதாக வந்த 1068 மதிப்பெண்கள் பெற்ற மாலதி என்ற மாணவியின் "அறியாமையை" கண்டு ஒரு நிமிடம் ஆடிப்போனோம். என்னம்மா, apply பண்ணிருக்க? என்று நம்மவர்கள் கேட்க,
“B.Sc Maths" மட்டும் தான் apply பண்ணிருக்கேன் அண்ணா. B.E. எல்லாம் எங்க வீட்ல படிக்க வைக்க மாட்டங்க. அதில்லாம B.E. க்கு எங்க application கொடுப்பாங்க அண்ணே?
என்று வெள்ளந்தியக "அம்மணி" கேட்ட கேள்விக்கு மௌனத்தைத் தவிர வார்த்தைகள் இல்லை நம்மிடம்.
மாலதியின் cut-off மார்க்கிற்கு AnnaUniversity உள்ளிட்ட அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளுமே கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவளை வழிநடத்த சரியான ஆட்கள் இல்லாததால் இவளுக்கு இந்த நிலை.
வேரு என்ன course இவள் மார்க்கிற்கு கிடைக்கும் என அலசி ஆராய்ந்ததில் ஒருவழியாக M.Sc(I.T.,CSE) apply பண்ணச் சொல்லி "கலந்தாய்வு" செய்தொம்.நம்முடைய கலந்தாய்வில் ஒருவாரு தெளிவு பெற்றவளாய் நம்மிடமிருந்து விடைபெற்ற "அம்மணி" மறுநாள் M.Sc(I.T.,CSE)க்கு விண்ணப்பித்துவிட்டதாக அலைபேசியில் சொன்னபோது நம்மையே அறியாமல் நமக்கு ஒரு "ஆத்மதிருப்தி” கிடைத்ததை யாரலும் மறுக்க முடியாது.
மதிப்பெண்கள் இருந்தும், திறமைகள் இருந்தும் சரியான வழிநடத்தல் இல்லாததால் மலைகளுக்குள்ளேயே முடங்கி போகிறார்கள் ஜம்னாமரத்தூர் மாணவர்கள். “SMILE” போன்ற கல்வியை அடிப்படையாகக் கொண்ட தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் இந்த மலைகிராமங்களில் கால்பதித்து அவர்களுக்கான சரியான பாதையை காட்ட வேண்டும்.
"தெளிவு" என்ற வார்த்தைக்கு "பள்ளிகளின்" அகராதியில் பொருள் தேடினால் "பெருங்கட்டூர்" என்றிருக்கும். ஆம். பெருங்கட்டூர் பள்ளியைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு மேல். இவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் நெசவு,விவசாயக்கூலிகள் மட்டுமே.
"வறுமை"யும் "சூழலும்" கல்விக்குத் தடையே இல்லை என்பதற்கு பெருங்கட்டூர் பள்ளி மாணவர்கள் ஓர் சிறந்த உதாரணம். மாவட்டத்தில் 2-ம் மற்றும் 3-ம் இடங்களைப் பெற்ற வரதராஜன்,வினோத்குமார் இருவருமே இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
M.Sc(I.T.), Electronics media,catering என அனைத்து தெளிவான தகவல்களையும் புட்டு புட்டு வைக்கிறர்கள் இப்பள்ளி மாணவர்கள்.
மற்றுமொறு ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், இப்பள்ளி மாணவர்கள் "Tution" போன்ற சிறப்புப் பயிற்சி வகுப்புகள் எதுவும் செல்வதில்லை.
"கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்புகள்" என்பதற்கு "பெருங்காட்டூர்" ஓர் முன்னுதாரணம்.
இப்பள்ளி மாணவர்களுடன் நாம் பேசிய பிறகு "உன்னால் முடியும் தம்பி" படம் பார்த்த feel. கடைசியாக வந்த பாபு நம்மை "கலகலக்க வைத்துவிட்டான்.
சொல்லுப்பா என்னென்ன course apply பண்ணிருக்க என நம் "தளபதி"(குணா)கேட்க,
நான் பக்தவசலம் பாலிடெக்னிக்கில் படிச்சிட்டு இருக்கேன்.போனவாரம்தான் சேர்ந்தேன்.
fees எல்லாம் கட்டியாச்சா?
ஆச்சு... ஆச்சு...
எங்க help எதாச்சும் உனக்கு தேவையா?
அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. எங்க வீட்லயே fees கட்டி என்னை படிக்க வைப்பாங்க.
பிறகு எதுக்குப்பா இங்க வந்தா?
வாத்தியாருதான் போகச் சொன்னாரு. அவரு தப்பா நெனைக்கக் கூடாதுன்னுதான் இங்க வந்தேன் என்று அவன் சொன்னபோது அந்த இடமே சிரிப்பொலியால் ஒலித்தது.
வெள்ளந்தித்தனமான இம்மாணவர்களிடம் இருந்து வாழ்வின் தாரகமந்திரங்களான "நேர்மை","எளிமை" போன்றவற்றை நாம் நிச்சயம் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
44 மாணவர்களிலிருந்து இறுதியாக 15 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
"CSS சாதனா '09" "சரித்திர நாயகர்களை" உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கிராமங்களை நோக்கிய நம் பயணத்திற்கு "CSS" அடித்தளமிட்டுள்ளது. "PP Rural Reach" இந்தக் "கிராமங்களை" கோபுரங்களாக்கும்.
இந்த கிராம மாணவர்கள் "CBSE", matriculation படிக்கும் ஆயிரமாயிரம் நகர மாணவர்களுக்கு நிச்சயம் "மணியடிப்பார்கள்" என்பதில் மாற்று கருத்தே இல்லை.
நகரவாசிகளான நாம் "CSS" மற்றும் "கிராம மாணவர்களுடன் கைகொடுப்போம்.
நம்முடைய இந்த "இணைந்த கைகள்" "ஒளிமயமான", "வளர்ச்சி" இந்தியாவை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் நம் பாதையில் நாம் பயணிப்போம்...
"நம் பயணம் இம்மாணவர்களின் படிக்கற்கள்".
Thursday, April 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment