SMILE WELFARE FOUNDATION

In SMILE
we strongly believe that
- Service is not something superficial
- We do NOT adopt we get adopted
- We do NOT sacrifice we just share
- We do NOT donate we are in turn blessed
For more info on SMILE please visit SMILE

Tuesday, February 10, 2009

பிரிவோம் சந்திப்போம் - adiyen VAsu

10-12-2005 - SMILE-oda 'புன்னகை பாலம்' கட்ட முதல் செங்கல் எடுத்து வெச்ச நாள். அன்னைக்கு சும்மா "நீங்க படிச்சிட்டு என்னவாகப் போறிங்கன்னு " கேட்ட சின்ன கேள்விக்கு, SMILE-இன் வரலாற்றில் தங்களது பெயரை ஆணித்தரமாக எழுத புறப்பட்ட பேனாக்களை ஜொலிக்கிறார்கள் நமது +2 மாணவிகள். 'Hostel பசங்கன்னா அவளோதான்' என்று பல ஆண்டுகளாக பேசி திரிந்த அனைவருக்கும் சவுக்கடியாய் இருக்கப்போகிறது இந்த ஆண்டு இவர்கள் சொல்லப்போகும் பதில், வாயால் அல்ல வாழ்கையால்......
உண்மையில் இது புன்னகை பாலத்தின் முதல் பிரசவம்....வெறும் கேள்விக்குறியாய் ஆரம்பித்த இவர்கள் வாழ்க்கை எல்லோர் மத்தியிலும் பெரும் அச்சர்யாக்குரியாய் மாறப்போகும் நாள் தொலைவில் இல்லை. இவ்வளவு அழுத்தமாக நாங்கள் சொல்ல ஒரு காரணம் உண்டு. கண்ணிலே கனவையும், நெஞ்சிலே நம்பிக்கையை மட்டுமே கொண்டு வெற்றியை நோக்கி பயணம் செய்யும் இவர்கள் தோற்க வாய்ப்பில்லை என்ற கர்வமும் உண்டு. "CHAK DE" படத்துக்கும் எங்களுக்கும் பெரிய வேறுபாடில்லை...அதே போராட்டம், அழுகை, சண்டை, தோல்வி, அவமானம், என்று எல்லா முகங்களையும் மூன்றண்டுகலாய் பார்த்து விட்டோம். இறுதியில் அந்த வெற்றியை ருசிக்கும் நாளை மட்டுமே எங்கள் மன Calender-இல் குறித்து வைத்து காத்திருக்கிறோம் உங்களோடு சேர்ந்து கொண்டாட.
அந்த பெரிய முயற்சிக்கு பின்னால் ஒரு சின்ன Silence வேணும்னு தோனுது . அதான் 'CHAK DE DAY' -ன்னு பேர் வெச்சிருக்கிறோம் இந்த சின்ன function-கு. இது கண்டிப்பா farewell இல்ல. ஏற்கனவே நாங்க விதைச்சிருக்கிற நம்பிக்கைக்கு உங்களோட வாழ்த்துக்கள் மூலமாகவும், எதிர்பார்ப்பு மூலமாகவும் உரம் போடபோற நாள்....
" நமக்கு யாருமே இல்லன்னு" நினைக்கிற அந்த சின்ன மனசுக்கும், "எப்படி நம்மளால இவ்வளவு மார்க் வாங்க முடியும்"-ன்னு இருக்கிற சின்ன சந்தேகத்துக்கும், "நம்மால இது முடியுமான்னு" கேள்வி கேக்குற அந்த பெரிய கனவுக்கும் நீங்க தான் பதில் சொல்லணும் உங்க வார்த்தைகளால , வாழ்தால..."எல்லாத்துக்கும் நாங்க இருக்கோம், உன்னால முடியும்னு" உங்களோட மட்டும் இல்லை, SMILE -ஓட மொத்த குரலும் இன்னும் கொஞ்ச நாள் அவங்க காதுல ஒலிச்சிட்டே இருக்கனும் ALARM - மாதிரி.....
நீங்க எந்த ஊர்ல இருந்தாலும், friends, relatives - யாரா இருந்தாலும் உங்க Message-a மட்டும் மறக்காம ஒரு சின்ன video clipping-a அனுப்பிடுங்க...இப்ப நாம அவங்களுக்கு கொடுக்குற பெரிய Boost, Horlicks, எல்லாம் அது தான்...
4 - வயசில Hostel- ன்ற சின்ன உலகத்துல நுழைஞ்சு எத்தனையோ பேர் , இந்த வருஷம் உலகம் - ன்ற பெரிய வீட்டுக்கு வராங்க. மூணு இல்ல நாலு வருஷம் college முடிச்சிட்டு வெளில வந்த நமக்கு தெரியும் college life- ன்னா என்னன்னு. 14 வருஷம் ஒரு குட்டி வாழ்க்கையே வாழ்ந்தவங்களோட அனுபவத்தை கேட்கவா வேணும். அவங்க கிறுக்காத சுவர் இல்ல , நடக்காத படி இல்ல, பார்க்காத கஷ்டமும் இல்ல. இப்படியே இல்லை, இல்லை, இல்லை - ன்ற எல்லாத்துக்கும் நாம பதில் சொல்லணும் அந்த ஒரு நாள் மட்டும் நீங்க மனசு வெச்சா.....
இத்தனை வருசத்தில இப்படி ஒரு Hostel - a பார்த்ததே இல்லன்னு சொல்லுற அளவுக்கு, சந்தோஷம்னா என்னன்னு அவங்களுக்கு புரியுற அளவுக்கு, எல்லாத்தையும் அந்த மனசுல குட்டியா கட்டம் கட்டி , Bold Letter-la எழுதணும். இது அந்த குட்டி வயசில அனுபவிச்சு சுமந்த பெரிய பாரத்துக்கு நாம கொடுக்குற மரியாதை.
அந்த Hostel-a ஒவ்வொருத்தரோட நினைவுகளுக்கு சமமா நம்மால நிச்சயமா எந்த Gift - ம் கொடுக்க முடியாது. இருந்தாலும் சுமை தாங்கிக்கு எடைக்கு எடை இல்லாட்டியும் முடிஞ்ச வரைக்கும் இரண்டு கையும் பத்தாத அளவுக்கு Gifts - கொடுக்கணும் நீங்க நினைச்சா.......
Hair Clip, Pen, Dress - ன்னு உங்களோட வட்டத்த நான் சுருக்க விரும்பலை...நீங்க என்ன கொடுத்தா அந்த சந்தோஷத்த அதிகப் படுத்த முடியும்னு தோணுதோ அதையே பண்ணுங்க....ஆனா ரொம்ப நேரம் எடுத்துக்காதிங்க....
கண்ணோடு கண்பார்த்து சந்தோஷத்துல கலந்துக்க நேர்ல வாங்க....மனசோட வாழ்த்த மட்டும் அனுப்புறவங்க Clippings-a அனுப்பி சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க....சுமைகளை மட்டுமே தாங்கிய இதயம் இந்த சந்தோஷத்தை தாங்காமலா போய்விடும். ஆனால் உங்கள் பரிசுகளை தாங்க இரண்டு கைகள் போத கூடாது என்பதே எங்கள் எண்ணம்.
புன்னகை பாலம் மூலமா நாம விதைத்ததை இப்ப அறுவடை பண்ணிட்டு உடனே SADHANA 2008 என்ற விதையை விதைக்கப் போறோம். விதைக்கலாம் வாங்க......
So, PUNNAGAI PALATHIL- பிரிவோம் .........
SADHANA - வில் - சந்திப்போம்..............
வெற்றியுடன்
Punnagai Palam Team

No comments: