SMILE WELFARE FOUNDATION

In SMILE
we strongly believe that
- Service is not something superficial
- We do NOT adopt we get adopted
- We do NOT sacrifice we just share
- We do NOT donate we are in turn blessed
For more info on SMILE please visit SMILE

Tuesday, February 17, 2009

பூக்களின் புத்தாண்டு - New Year 2008 in kanchi home by Valli

ஒரு ரோஜா நம்மைப்பார்த்து புன்னகைத்தாலே வானுக்கும் பூமிக்கும் குத்தாட்டம் போடும் நம் மனசு , ஒரே சமயத்தில் 200 ரோஜாக்கள் புன்னகைத்தால் ?

இந்த 200 ரோஜாக்களின் புன்னகை திருவிழா அரங்கேறியது கடந்த ஜனவரி 1 காஞ்சியில்.

" காஞ்சியில் புன்னகை (SMILE) கால்தடம் பதித்து முதல் வருடம் !
பூக்கள் புன்னகையோடு (SMILE - உடன்) புத்தாண்டைக் கொண்டாடியதும்
இதுதான் முதல் வருடம் !

இங்கே விதைகள் விதிக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகின்றன

என்ற வாசுவின் வரிகளுக்கேற்ப கடந்த ஆண்டு இதே ஜனவரி 1 அரவிந்த், குணாவால் காஞ்சியில் விதைக்கப்பட்ட விதை இன்று ஒரு வருடங்களை கடந்து செடியாய் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

' ரம்மியமான ரங்கோலி , Paper மழை, "Happy New Year, Happy New Year" என்ற வாழ்த்துக்களோடு நம்மை வரவேற்ற Kanchi kids'.

உள்ளே நுழைந்ததும் " இதுதான் எட்டு மணிக்கே வர்றதா " என்ற அவர்களின் கேள்விக்கு


நிகழ்ச்சி நேரமோ எட்டரை,
அண்ணன்களை தழுவியதோ நித்திரை ,
ஆதலால் நாங்கள் இங்கு வரும் நேரம் பத்திரை"

என ஒருவாறு T.R. ஸ்டைலில் பேசி சமாளித்தோம்.

T.V. - யின் சிறப்பு நிகழ்ச்சிகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு நம் சிறப்பு விருந்தினரோடு குதூகலித்து கொண்டிருந்த அவர்கள் நம்மிடம் அடுத்ததாக கேட்டது,
" அண்ணா ! குணா , நித்தி அண்ணா கிட்ட எல்லாம் நாங்க Wish பண்ண
முடியுமா ? "

அடுத்த 15 நிமிடங்களில் SMILE-இன் நித்தி, குணா, வாசு, சுப்பு , பிரபு , லதா, ஆகியோருடன் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை ஏகப்பட்ட மகிழ்ச்சியோடு பரிமாறிக்கொண்டனர் நம் Kanchi Kids.

குட்டீஸ்கள் படைசூழ "CHAKDE KANCHI 08" - Cake வெட்ட அப்போது பூத்த பூக்களின் புன்னகையை பார்த்தவர்கள் அனைவருமே ஒரு நிமிடம் தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்து கொண்டார்கள் , தாங்கள் இருபது பூமியிலா அல்லது சொர்க்கத்திலா என்ற சந்தேகத்திற்காக.

" தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தேடல் " என வழக்கமான பாணியில் நம்மவர்கள் எடுத்து விட , சற்றே சோர்ந்து போயிருந்த நம் குழந்தைகளை உற்சாகத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்றது நம் சிறப்பு விருந்தினரின் 'பரத நாட்டிய நிகழ்ச்சியும்' அதனை தொடர்ந்த அவரின் அனல் பறக்கும் சிறப்புரையும் தான்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்" - என்ற

வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நாம் அனைவரும் ஒழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தால் மாற்ற எல்லா விஷயங்களும் நம்மைத் தேடி தானாக வரும் . இந்தப் புத்தாண்டில் எனக்காக நீங்கள் ஒரே ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். அது ,

சிரமமின்றி எதுவுமில்லை , சிரமம் என்பது எதுவுமில்லை

என அன்புக் கட்டளை விடுக்க, அதையே புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர் நம் குழந்தைகள்.

துடைத்தட்டி எழச்செய்யும் தன் பேச்சுத்திறமையால் Kanchi Kids - இன் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த அந்த சிறப்பு விருந்தினர் வேறு யாரும் இல்லை...சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் "சாதனா" Project-இன் லோகாம்பாள் தான்.

" தொடக்கம் கொஞ்சம் தொய்வு என்றாலும் முடிவு முத்தாய்பாய் இருந்தால் தான் நிகழ்ச்சி முழுமைப் அடையும். அப்படி நிகழ்ச்சியின் முத்தாய்பாய் அமைந்தது,

" SMILE TOP TEN AWARDS - 2007"

காஞ்சியைப் பொறுத்த வரையில் கணிதத்தைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை. அப்படி கணிதத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் M.அகிலா, சத்யா, கவிதா "கணிதப் புலி - 07" விருதினை வியப்போடு வாங்கிச் சென்றனர்.

விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை தன் கேள்விக்கணைகளால் நம்மைத் திணறடித்துக் கொண்டிருக்கும் ஸ்டெல்லா மேரி "கேள்வியின் நாயகி - 07" விருதினை எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கிச் சென்றார்.

நக்கல், நையாண்டிக்கு பேர் போனவர் நம்ம சத்யராஜ். ஆனால் காஞ்சியை பொறுத்த வரையில் நக்கல், நையாண்டி என்றால் அது நம் திவ்யா, காயத்ரி, கனிமொழி தான். இந்த முப்பெரும் தேவியர் தான் "நக்கல் நாயகிகள் - 07" விருதினை தட்டிச் சென்றனர்.

இதுத் தவிர பாடல், ஓவியம், எழுத்து, என திறமைக்கேற்ப மோகனலக்ஷ்மி, E.அகிலா, சௌதா, ஆகியோரும் விருதுகளை அள்ளிச் சென்றனர்.

Kanchi குழந்தைகள் அனைவருக்குமே வித விதமான புத்தகங்களையும், பரிசுகளையும், வழங்கி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர் நம் கணேஷும், தமிழ்வாணனும். நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாய் நிறைவை நெருங்க ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்றோம் நாமும், Kanchi kids -ம் .

" இதுவரைக்கும் எத்தனையோ New Year T.V. - யிலும், வெட்டியாய் ஊர் சுத்தியும் செலவு பண்ணியிருக்கேன். ஆனா என்னைக்கு மாதிரி என்னைக்குமே நான் சந்தோஷமா இருந்தது இல்லை. இந்த சந்தோஷம் கடைசி வரையில் கிடைச்சா அதுவே எனக்குப் போதும்" என கலங்கியக் கண்ணோடு நம்மிடம் சொன்ன கலாநிதியால் அந்த ஒரு நிமிடம் நாமும் கலங்கித் தான் போனோம். (இது தாங்க உண்மையிலே ஆனந்தக் கண்ணீர்).

காஞ்சியின் இந்த New Year கொண்டாட்டம் வெற்றிப் படிக்கட்டுகளின் முதல்படி ....... இனிவரும் காலம் சிகரத்தை நோக்கிய காஞ்சியின் பயணம் தொடரும்...... இந்த New Year நம் வெற்றியின் தொடக்கம்......முடிவல்ல........"

மகிழ்ச்சியுடன் ,

Kanchi Team

No comments: