SMILE WELFARE FOUNDATION

In SMILE
we strongly believe that
- Service is not something superficial
- We do NOT adopt we get adopted
- We do NOT sacrifice we just share
- We do NOT donate we are in turn blessed
For more info on SMILE please visit SMILE

Thursday, April 15, 2010

Punnagai Palam Rural Reach - Cheyyar PDC Program write up by Tamil Vanan

புன்னகை சுவாசங்களுக்கு, முதல் குழந்தை, முதல் வகுப்பு, முதல் நட்பு, முதல் காதல், முதல் அழுகை, முதல் சந்தோஷம், இவை எல்லாம் எப்படி நமக்கு ஒரு எதிர்பார்ப்பை நகழ்தியதோ அதை போல தான் எங்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது 'பீ பீ பிரபு' எடுக்கும் செய்யார் PPRR இன் "முதல் PDC".

காலதாமதம் காலனுக்கும் உண்டு. அதைப்போல தான் அன்று கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்தது PDC. குணா தலைமை தாங்க, பிரபு அரங்கேற்ற நானும், ரஞ்சித், கணேஷ்மூர்த்தி, கலாநிதி மற்றும் நம் விழா நாயகர்கள் "PPRR பசங்க" (பத்து பேர்) கலந்து கொண்டோம்.

வாழ்கையின் வெளிச்சத்தை நோக்கி பயனிக்க சொல்லும் அந்த PDC கிளாஸ், மின்சார தடங்களுடன் தான் அன்று பயணித்தது. இசைஞானி இளையராஜா வோட முதல் பாடல் பதிவும் இருட்டில் தான் ஆரம்பித்தது என்று நினைக்கும் போது..மனசுக்குள் torchlight...

பட்டாசு திரி ஏத்தீயவுடனே எவ்வளவு வேகமா வெடிக்க அரம்பிக்குமோ அந்த வேகத்தில் வந்து விழுந்து கொண்டிருந்தது பிரபு வின் வார்த்தைகள், ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலே.

PP Prabu வின் பேச்சு, ஆளுமை திறன் ல ஆரம்பிச்சு, Time mangement, Self Analysis, How to prepare exam, How to face exam and how to overcome exam fever, Carrier guidance, Cut-Off mark - ன்னு, ஒவ்வொரு topics - ம அவர் சொன்ன விதம், அதற்கான உதாரணம், Model charts, நிச்சயம் அங்கு இருந்த அத்தனை பேரையும் வாழ்கையின் ஒரு படி மேல ஏறி அடுத்த படி ஏறுவதற்கும் தயாரா இருக்க வைத்திருக்கும்.

ஒரு நடுவர் மாதிரி குணா நடுவில் நுழைந்து explanation கொடுத்தது, கேம்ஸ் நடத்தியது எல்லாம் சூப்பர் என்ட்ரி அண்ட் என்டர்டைன்மென்ட்.

வலியை ஏற்று கொள் அதுதான் நீ உயிர் வழ்வதுற்கான அத்தாச்சி! - என்ற கவிதை நினைவுக்கு வந்தது குணா சொன்ன Pleasure and Pain explanation அண்ட் PPRR PDC booklet explanation.

ஒரு நாள் வழக்கை தான் என்றாலும் பூக்கள் தன்னை மண்ணில் விதைத்து விட்டு தான் செல்கிறது, அன்றைய PDC class இம் தன்னுடைய விதையை முலைய செய்திருக்கிறது மாணவர்கள் மனதில்.

ஓட்ட பந்தயத்தில் ஓடுபவர்கள் reach line கிட்ட நெருங்கும் போது audience முகத்தில் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமோ அதற்கு மேல் ஒரு பயம் கலந்த எதிபார்ப்பு இருந்தது பசங்க முகத்தில PDC முடிஞ்சு வெளிய வரும் போது. +2 யை எதிர்நோக்கிய அவர்களுடைய பயணம்... ஒரு ஆர்பரிப்பை தரும் என்ற நம்பிக்கையுடன்..
கிராமிய தமிழன்
ஆ. ப. தமிழ்வாணன்.
என்னதான் ஒரு நிகழ்ச்சி - இல் நிறைய நல்ல விசயம் நடந்தாலும் திருத்தி கொள்ள வேண்டிய நிகழுவுகளும் இருக்கும். அப்படி தான் ப்ரொஜெக்டர் அண்ட் லேப்டாப் வொர்க் ஆகமல் போனது. ஸ்கூல் ரெஸ்ட் ரூம் "கீ" வாங்காமல் போனதுன்னு சின்ன சின்ன நிகழ்வுகள் அடுத்த முறை எங்களை pre-plan செய்ய வைக்கும்.
நெரிசல் உள்ள பேருந்தில் பயணம் செய்யும் போது ஒரு டிக்கெட் வாங்கு வேண்டும் என்றாலும் அது நீறைய பேர் கடந்து சென்றால் தான் நிகழும். நம் PPRR Booklet பின்னாடியும் valliganthan, Guna வுடைய கண்கள் 100 மணி நேரம் செலவு செய்து 1௦௦ பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை தயார் செய்தார்கள். அவர்களக்கு நம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி. Cheyyar - இல் PPRR என்று சொன்னவுடன் நம் நண்பர்கள் ஹால், ப்ரொஜெக்டர், சாப்பாடு அத்தனை வேலையும் செய்த Annadurai, Koti annan அவர்களுக்கும், இதை background இல் ஒரு போன் கால் செய்து முடித்த நம் 'பிக் வாய்ஸ்' valligaanthan - கும் கோடி நன்றி. நிச்சயம் இது நன்றி உரை அல்ல நெகிழ்ந்த உரைகள்....
தவறுகள் மனிதனை வழிநடத்தும்...

No comments: