"புன்னகைப்பாலம் Rural Reach-09”
கிராமங்களை நோக்கிய SMILE-ன் பாதை தேடும் பயணத்தில் முட்பாதைகளை மலர்களாக மாற்றும் ஒரு புதிய முயற்சி "புன்னகைப்பாலம் Rural Reach-09”.
இந்த “புன்னகைப்பாலம் Rural Reach-09” –ன் தொடக்கவிழா கடந்த ஞாயிறு(05/07/09) அன்று "ஆண்பனை", "பெண்பனை" ஆக மாறிய மாற்றங்களுக்குப் பேர்போன "செய்யாறு" மாநகர் "இராகம்" திருமண மஹாலில் நம் "தல" (நித்தி)யின் தலைமையில் அமைதியாக அரங்கேறியது.
“SMILE” தன் 5 வருடக் கல்விப்பயணத்தில் "அட்சயா", "புன்னகைபாலம்", “சாதனா", "அற்பிதா", "சிக்ஷா" என ஐந்து வெவ்வேறான திட்டங்களை தீட்டியிருந்தாலும் “PPRR" இவைகளிலிருந்து சற்றே மாறுபட்டு SMILE-ஐ அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
கடந்த ஆண்டு(2008) "காஞ்சி காப்பகம்" நம்மை கைவிட்டுப்போனபோது நடந்த meeting-ல் "PPRR"-க்கான பேச்சு ஆரம்பித்தது. சில விவாதங்களும் அரங்கேறியது. இந்த விவாதங்களுக்கான விடையை January-க்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என நித்தி "தடா" விதிக்க கடந்த March month நீண்ட இடைவெளிக்குப்பிறகு மிகுந்த கருத்துப் பரிமாறல்களுக்குப் பிறகு "PPRR"-க்கான அடிமட்ட வேலைகளை நித்தி, குணா, ராஜேஷ், பிரபு, கணேஷ் ஆகியோர் கொண்ட குழு தொடங்கினர். சுமார், 15 நாட்கள் இடைவிடாது இரவும் பகலும் நடைபெற்ற திட்டமிடலுக்குப் பிறகு "PPRR"-க்கான Budget, proposal என அனைத்தும் பக்காவாக ரெடியாகி "April-4" "SMILE Birthday" Celebration-ல் உறுப்பினர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது.
மிகுந்த திட்டமிடலும், exact புள்ளி விவரங்களும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "PPRR"-ன் பின்னணி பற்றி இங்கு எழுத வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
"சாதனா-07"-ற்காய் நாம் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மாணவர்களை தேர்வு செய்தது உங்கள் அனைவருக்குமே நினைவிருக்கும். அப்போது நம்மிடம் வந்த பெரும்பாலான கிராம மாணவர்களின் விண்ணப்பங்களில் 10th Mark 400, 450 என்றும் +2 Mark வெறும் 800,850 என்று மட்டுமே எழுதியிருந்தது. அன்று அதைப்பற்றி அவ்வளவாக அலசி ஆராயவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சில ஆசிரியர், மாணவர்களுடன் கலந்துரையாடியதிலிருந்து மூன்று முக்கியமான காரணங்கள் நமக்கு தெரிந்தது.
1. பெரும்பாலான கிராமத்து மாணவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.அவர்களுடைய வீட்டுச் சூழல் காரணமாக அவர்களால் Tution போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல இயலவில்லை.
2. கிராமப்புற மாணவர்களை உயர்கல்விக்காய்(Carrier Guidance)வழி நடத்த சரியான ஆட்கள் இருப்பதில்லை
3. அவர்களை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் வீட்டில் யாரும் இருப்பதில்லை.
இந்த மூன்று காரணங்களை கருத்தில் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காய் நம்முடைய 5 வருடக் கல்வி அனுபவங்களைக் கொண்டு மிக மிக நுட்பமாய் செதுக்கப்பட்டதுதான் இந்த "PPRR".
"PPRR"-ற்கான Ground work-யும்,உறுப்பினர்களின் ஒப்புதலும் பெற்ற பிறகு கடந்த May மாதம் மீண்டும் நித்தி,குணா & Co ஒன்று கூடி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கினர்.
10-ம் வகுப்பில் 375-க்கு மேல் எடுத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 15 மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காய் அதிகளவு ஆசிரியர்கள்,பள்ளிகளுடன் தொடர்பிருந்த காரணத்தால் செய்யாறை தேர்ந்தெடுத்தோம்.இந்த 15 மாணவர்களுக்கு +1,+2 முழுமைக்குமான 'Tution fees" கட்டுவதோடு மட்டுமில்லாமல் மாதத்திற்கு ஒரு முறை “PDC" உள்ளிட்ட சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
June-2 பள்ளிகள் அனைத்தும் திறந்தவுடன் "PPRR" Application-ஐ எடுத்துக்கொண்டு "பெருங்கட்டூர், வடமணப்பாக்கம், சித்தாத்தூர், வெம்பாக்கம், பைங்கினர்" உள்ளிட்ட செய்யாறைச் சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கு பயணித்தோம்.
சுமார் 100 விண்ணப்பங்கள் எல்லாப் பள்ளிகளுக்கும் சேர்த்துக் கொடுக்கப்பட, இறுதியாக நம்மிடம் வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 86. இந்த 86 விண்ணப்பங்களிலிருந்து "PPRR Head Rajesh", குணா உள்ளிட்டோர் கொண்ட குழு ஆசிரியர்களுடன் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு 36 Application-ஐ "நேர்முகத்தேர்வுக்காய்த்" தேர்ந்தெடுத்தனர்.
கடந்த June-28 அன்று இம்மாணவர்களுக்கான "நேர்முகத்தேர்வு" அந்தந்த மாணவர், அவர்களின் பெற்றோர்களுடன் நடைபெற்றது. காலை 7.30 மணிக்குத் தொடங்கிய "நேர்முகத்தேர்வு" மாலை 3 மணிவரை இடைவெளியின்றி இனிதே நிறைவேறியது.இந்த நேர்முகத்தேர்வில் நம்மை Impress செய்த கிராமப்புற மாணவர்கள் ஒரு சிலரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
“Engineer” கனவுகளோடு 418 மதிப்பெண்கள் பெற்று "Engineer" போலவே "TIP-TOP"-ஆக "TUCK-IN" செய்து கொண்டு வந்த கஜேந்திரன்(வடமணப்பாக்கம்)நம்மிடம்,
ஏம்பா Mark கம்மியாயிருக்கு?
"நான் போன வருஷம் Tution-லாம் போகாம படிச்சேன் சார். அதுக்கே இவ்ளோ எடுத்திருக்கேன் இன்னும் Tution போயிருந்தா இதவிட அதிகமா எடுத்திருபேன். Tution போக எங்க வீட்ல வசதியில்ல.
Tution போனாதான் நிறைய மார்க் எடுக்கமுடியுமா?
அப்படில்லாம் இல்ல சார். கொஞ்ச மார்க் அதிகமா எடுக்கலாம். இப்ப +1,+2-க்கு Tution போனாதான் நெறைய மார்க் எடுக்கமுடியும்னு சொல்றாங்க. நீங்க என்ன சேர்த்துவிடுங்க சார் நான் 10-ல் விட்டதை +2-வில் எடுக்கறேன் என்று செம Bold-ஆகப் பேசி நம்மைக் கவர்ந்த இவன் இப்போது "PPRR-ல் ஒருவன்".
"சூர்யா"- பெயருக்கு ஏற்றபடி வந்த 30 பேரில் தனியாக ஜொலித்தவள் பேச்சிலும், செயலிலும்.
"என்னம்மா பொதுவா எல்லொரும் B.E-ன்னு போடுவாங்க. நீ B.E(Aeronatical)-னு போட்டிருக்க?
உனக்கு இந்த group-ஐ பத்தி என்ன தெரியும்?
நாம் கேட்டக் கேள்விக்கு ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் "சுடராய்" அவள் சொன்ன பதில்,
"Aeroplane" Side-ல நான் work பண்ணனும் அதுக்கு இந்தப் படிப்பு தான் படிக்கணுமாம். அதில்லாம நான் Particular-ஆ அப்துல்கலாம் தாத்தாகிட்ட படிக்கணும்.அதான் இத Choose பண்ணினேன்.
சரி, உன்னோட Aim I.P.S ஆகனும்னு போட்டிருக்க.
பிறகெதற்கு B.E.?
I.P.S கொஞ்சம் "Tough"-னு கேள்விப்பட்டேன். Suppose என்னால I.P.S ஆக முடியலைன்னா எனக்கு Safety வேணும் இல்லையா?
எனத் "தெளிவாய்" பேசிய "பெரும்பாலை கிராமத்தைச் சேர்ந்த இவளின் Flashback, நம்மையெல்லாம் உருக்குலைய வைத்துவிட்டது.
இவள் 3 வயதாக இருக்கும் போது இவளது தாயை இவள் தந்தை வரதட்சனைக்காய் குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.அன்று முதல் இன்று வரை வயதான retired Teacher-ஆன தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வரும் இவளை விதி "மாமி"யின் வடிவில் தற்போது துன்புறுத்திகொண்டிருக்கிறது.
ஆம்,"இவள் மாமி இவளை வீட்டில் இருக்கக்கூடாது என்கிறார்களாம்"
"ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் Tution கூட போகாமல் இவள் எடுத்திருக்கும் மதிப்பெண் 430.
இவளது "Flashback" தான் "சூர்யா" என்ற "சுடரை" மிகுந்த விவாதங்களுக்குப் பிறகு Select செய்ய காரணமாயிருந்தது.
இப்படி ஒவ்வொரு மாணவர்களையும் அலசி ஆராய்ந்ததில் இறுதியாக நமக்குக் கிடைத்த 15 மாணிக்கங்கள் தான் "PPRR List"-ல் உள்ளவர்கள்.
ஏகப்பட்ட விவாதங்களுக்கும், கருத்துபரிமாறல்களுக்கும் பிறகு உருவான "PPRR list"-ல் உள்ள 15 மாணவர்களுக்காய் ஓர் விழா எடுக்க முடிவு செய்து அரங்கேறியதுதான் PPRR தொடக்கவிழா.
Late but Latest- இது SMILE -ன் பாலிசி. அந்த வகையில் 10 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய PPRR விழா ஒரு சில Technical Problem-த்தினால் 11 மணிக்கு புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் துவங்கியது.
செய்யாறு மாநகரின் முக்கிய தொழிலதிபர்களான திரு.சுரேந்தர்(மீனாட்சி பேன்சி ஸ்டோர்), திரு.விஜயராகவன்(ராமகண்ணு செட்டியார் கடை), திரு.காமராசு(படிகலிங்கம்) மற்றும் நம் "தல" தலைமையேற்க அரங்கம் "விழாக்கோலம்" பூண்டது.
ஆரம்பத்தில் "Jaiho”,"Journey of SMILE","PPRural Reach” உள்ளிட்ட Video-கள் திரையிடப்பட, இவற்றையெல்லாம் பார்த்து மெய்சிலித்துப்போன Surendar,Vijayaragavan உள்ளிட்டோர் 5 மாணவர்களுக்கான இரண்டு வருட படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தலைமையுரை ஆற்ற வந்த நம் "தல" பேசியதும், செய்ததும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாததுபோல் இருந்தாலும் அதை வர்ணிக்காமல் நம்மால் இருக்கமுடியாது.
"தேடிச் சோறு நிதம் தின்று" - வழக்கம்போலத் தனக்கே உரிய பாணியில் பாரதிப் பாட்டை பாடி மாணவர்களுக்கு "தன்னம்பிக்கை" ஊட்டிய "தல" அடுத்து சொன்ன விஷயம் "PPRR Team" க்கு "தன்னம்பிக்கை" "டானிக்காக" இருந்தது.
"குணாவும், வாசுவும் அடிக்கடி சொல்லுவாங்க, உங்களுக்கு கல்யாணம் ஆனபிறகு உங்ககிட்ட இருந்து "Fund" வர்றது கம்மியாயிடிச்சு அண்ணா" என்று.
ஆனா நானும்,சத்யாவும் இப்ப இந்த 15 பேரோட list-யை பார்த்தோம். ரொம்ப Impress ஆயிட்டோம். இதுலிருந்து 6 பசங்களுக்கான செலவை நாங்க ஏத்துக்குறோம் என்று நித்தி சொல்ல "கரகோஷத்தால்" ஒட்டுமொத்த கூட்டமும் அவருக்கு தலை வணங்கியது.(என்ன இருந்தலும் "தல", "தல”தான்).
"SMILE" பற்றி குணாவும், "PPRR"-ஐ பற்றி ராஜேஷும் கொடுத்த "Powerpoint Presentation" இவ்விழாவின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் "மணிமகுடம்".
செய்யாறின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவராய் "PPRR"-ப் பற்றி தங்கள் கருதுக்களைச் சொன்னாலும் திரு.சுரேந்தர் அவர்களின் "கருத்துக்கள்" நம்மை திரும்பி பார்க்க வைத்தது.
இவர்களெல்லாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு உங்களுக்கு உதவுறாங்க. நீங்க இவங்களுக்கு செய்ய வேண்டிய கைமாறு "நல்லா படிக்கறது" மட்டுமல்ல, நல்ல படிச்சு பெரியாளாகி நீங்களும் இவங்க மாதிரி மத்தவங்களுக்காய் ஏதாச்சும் உதவி செய்யணும். அப்பதான் இந்த "PPRR" திட்டம் ஆரம்பிச்சதற்கான நோக்கம் நிறைவேறும்" என "இரத்தினச் சுருக்கமாய்" அவர் சொன்ன விதம் அவர் அனுபவத்தின் வெளிப்பாடு என்பதை நமக்கு உணர்த்தியது.
இறுதியாக வந்தாலும் இம்மியளவும் தொய்வு இல்லாமல் அரங்கில் இருக்கின்ற அனைவரையும் ஈர்த்தது நம் "சாதனா"வின் "சாதனைநாயகன்" வாசுவின் மூச்சுவிடாத பேச்சு.
"SMILE"-ஐ என்னைக்கு இழுத்து மூடறோமோ அன்னைக்குதாங்க நாம கல்வியில் முழுமைப் பெற்றிருக்கோம்" என்று அர்த்தம். என்னடா! இவன் ஆரம்பம் அன்னைக்கே மூடறதைப்பத்தி பேசறானேன்னு பார்க்கறீங்களா? ஆமாங்க "SMILE எதற்கு?, பணம் இல்லாம படிக்க கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யத்தானே, பசங்க எல்லாம் நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வந்து அவங்க மத்தவங்களுக்கு உதவி செஞ்சு யாருமே "பணமில்லாம படிக்கலை" அப்படிங்கற நிலைமை மாறிவரணும். அதுக்கு உங்களமாதிரி மாணவர்களும் ஈடுபாட்டோடு படிக்கணும்.
அந்த நாள் வரும்போது SMILE நிச்சயம் மூடப்படும், எனத் தனக்கே உரிய அதிரடிப் பேச்சினால் அனைவரையும் அதிர வைத்துவிட்டார் வாசு.
"விடியலில் தொடங்கிய SMILE இன்று கிராமப்புர மாணவர்களின் விடியலுக்காய் “PPRR” என்றப் பெயரில் தன் புதிய பயனத்தைத் தொடங்கியுள்ளது. SMILE-ன் இந்த பயணம் கல்வியில் புதிய பரிமாணத்தயும்,சரித்தரத்தையும் நிச்சயம் உருவாக்கும்."
"கிராம மாணவர்களுகாய் 'கனவு' காணுவோம்,
அவர்கள் கனவுகள் நிறைவேற நாம் முயற்சி செய்வோம்.
இக்கிராமப்புர மாணவர்களின் வெற்றிக்காய்...."
PPRR Cheyyar -விழாவில் “சலாம்” போட வேண்டியவர்கள்
" ராகம் திருமண மஹால்","மதிய உணவு" உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்தது மட்டும் அல்லாமல் இச்செலவிற்கான முழுத்தொகையும் “Sponser”-ஆக கொடுத்த "திரு. தருமன்"(ராஜேஷின் தந்தை).
நம் கல்விப் பயணத்தை முதன்முறையாக Video Clipping-ல் பார்த்து Impress ஆனது மட்டுமல்லாமல் மேடையிலேயே ரூபாய் 500 -ஐ கொடுத்த திரு. லஷ்மணன் ஆசிரியர்.
அன்று ஒரு நாள் முழுவதும் Auto-வை Free-ஆக தந்து "ஏதோ என்னால முடிந்தது" என்று சொன்ன கோட்டி(Auto Driver).
கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் Projecter-ஐ கொடுத்து உதவிய “Housing Board” “BRC” “Superintendent”
ஆயிரமாயிரம் சொந்த,தொழில் சம்பந்தமான வேலைகள் இருந்தும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அன்று முழுவதும் நம்முடன் ஓடியாடி வேலை செய்த உள்ளுர் "நண்பர்கள்".
இவர்கள் அனைவருக்கும் SMILE என்றென்றும் “சலாம்” போட கடமைப்பட்டிருக்கிறது.
"கிராம மாணவர்களுகாய் 'கனவு' காணுவோம்,
அவர்கள் கனவுகள் நிறைவேற நாம் முயற்சி செய்வோம்.
இக்கிராமப்புர மாணவர்களின் வெற்றிக்காய்...."
PPRR Cheyyar -விழாவில் “சலாம்” போட வேண்டியவர்கள்
" ராகம் திருமண மஹால்","மதிய உணவு" உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்தது மட்டும் அல்லாமல் இச்செலவிற்கான முழுத்தொகையும் “Sponser”-ஆக கொடுத்த "திரு. தருமன்"(ராஜேஷின் தந்தை).
நம் கல்விப் பயணத்தை முதன்முறையாக Video Clipping-ல் பார்த்து Impress ஆனது மட்டுமல்லாமல் மேடையிலேயே ரூபாய் 500 -ஐ கொடுத்த திரு. லஷ்மணன் ஆசிரியர்.
அன்று ஒரு நாள் முழுவதும் Auto-வை Free-ஆக தந்து "ஏதோ என்னால முடிந்தது" என்று சொன்ன கோட்டி(Auto Driver).
கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் Projecter-ஐ கொடுத்து உதவிய “Housing Board” “BRC” “Superintendent”
ஆயிரமாயிரம் சொந்த,தொழில் சம்பந்தமான வேலைகள் இருந்தும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அன்று முழுவதும் நம்முடன் ஓடியாடி வேலை செய்த உள்ளுர் "நண்பர்கள்".
இவர்கள் அனைவருக்கும் SMILE என்றென்றும் “சலாம்” போட கடமைப்பட்டிருக்கிறது.
1 comment:
This is the Great Move from SMILE.I wishes every activities from SMILE will success Greatly.
Post a Comment